100வது படத்தின் GLIMPSE ரிலீஸுக்கு நாள் குறித்த நாகார்ஜூனா!

X
100வது படத்தின் GLIMPSE ரிலீஸுக்கு நாள் குறித்த நாகார்ஜூனா!

தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நாகார்ஜூனா. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை போல் இவருக்கு தமிழ்நாட்டிலும் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

இவர் கடந்த 2025-ஆம் ஆண்டு தமிழில் ‘குபேரா, கூலி’ என இரண்டு படங்களில் நடித்தார். நாகார்ஜூனா நடிக்கும் புதிய படத்தை ‘நித்தம் ஒரு வானம்’ புகழ் இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கி வருகிறார்.

இப்படம் நாகார்ஜூனாவின் சினிமா கரியரில் 100-வது படமாம். இதில் வில்லனாக அசோக் செல்வன் நடிக்கிறார்.

இதற்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது, இதன் ஃபர்ஸ்ட் GLIMPSE-ஐ வருகிற ஆகஸ்ட் 29-ஆம் தேதி நாகார்ஜூனாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.