Jailer 2 முதல் Sarpatta Parambarai 2 வரை… தமிழில் அடுத்தடுத்து உருவாகும் சீக்குவல் படங்களின் லிஸ்ட்!
தமிழில் பல பார்ட் 2 படங்கள் ரெடியாகுகிறது.

ஒரு படம் வெற்றி அடைந்து விட்டால், உடனே அதன் சீக்குவலை எடுத்து கல்லா கட்டுவது அவ்வப்போது நடக்கும். இப்போது தமிழ் சினிமாவில் பல பார்ட் 2 படங்கள் ரெடியாகுகிறது. இதில் ஒவ்வொரு படமும் வெவ்வேறு ஸ்டேஜில் உள்ளது. அதன் லிஸ்ட் இதோ…
நெல்சன் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர் 2’. இப்படம் வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்துள்ள படம் ‘மூக்குத்தி அம்மன் 2: மஹா சக்தி’. இப்படம் வருகிற நவம்பர் 6-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

நவீன் இயக்கி, நடிக்கும் திரைப்படம் ‘மூடர் கூடம் 2 மிஷன் பாஸிபில்’. தரணிதரன் இயக்கத்தில் சத்யராஜ், சிபிராஜ் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘ஜாக்சன் துரை இரண்டாம் அத்தியாயம்’.
S.K.ஜீவா இயக்கத்தில் J.S.K.சதீஷ் குமார் நடிக்கும் திரைப்படம் ‘குற்றம் கடிதல் 2’. பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படம் ‘சார்பட்டா ரவுண்ட் 2’.












