விஷயம் தெரியாம பேசாதீங்க!. எஸ்.கே-வோடு படம் பண்ணுவேன்!.. வெங்கட்பிரபு பேட்டி..

சிவகார்த்திகேயன் படம் பற்றி வெங்கட்பிரபு பேட்டி..

sk vp

தமிழ் சினிமாவில் சென்னை 28 திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் வெங்கட் பிரபு. இவர் இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் மகன். சென்னை 28 திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றதால் சரோஜா, கோவா உள்ளிட்ட படங்களையும் இயக்கினார் வெங்கட்பிரபு. அதில் அஜித்தை வைத்து அவர் இயக்கிய மங்காத்தா ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதேபோல் விஜயை வைத்து கோட் படத்தையும் அவர் இயக்கினார்.

இந்த படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகியும் வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படம் தற்போது வரை துவங்கப்படவில்லை. சிவகார்த்திகேயனுக்கு வெங்கட்பிரபு ஒரு கதையை சொல்லி அவரும் அதில் நடிக்க சம்மதித்தார். ஆனால், அந்த படத்தில் நடிக்காமல் மற்ற படங்களில் நடிக்க துவங்கிய சிவகார்த்திகேயன் வெங்கட்பிரபுவை டீலில் விட்டார்.

அதனால், வெங்கட்பிரபு அப்செட்டில் இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும், சமீபத்தில் இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த வெங்கட் பிரபுவின் அப்பா கங்கை அமரன் ‘ஒரு நடிகன் உன்னை அவமானப்படுத்தியிருக்கிறான்.. அவன் காலில் விழுந்து படம் பண்ண வேண்டுமா என்று வெங்கட் பிரபுவிடம் கேட்டேன்’ என அவர் கூறியிருந்தார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்த வெங்கட் பிரபு ‘ஒரு தகப்பானாக என் அப்பா காட்டிய கோபம் அது. அவர் மீது தவறில்லை.. எஸ்.கே-வுடனான படம் சில காரணங்களால் துவங்கப்படவில்லை .மற்றபடி எனக்கும் அவருக்கும் எந்த மனக்கசப்பும் இல்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்தான்.. சரியான நேரத்தில் நல்ல கதை என்னை தேடி வந்தால் மீண்டும் சிவகார்த்தியுடன் இணைந்து பணியாற்றி விரும்புகிறேன். இதோடு, இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ என அவர் கூறியிருக்கிறார்.

CR
ஆசிரியர்

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →