டேர் டெவில் படத்துக்கு பணம் போட ஆள் புடிச்ச அஜித்!.. எல்லாம் சரியா வருமா?….

அஜித்தின் டெர் டெவில் அப்டேட்

dare devil

தமிழ் சினிமாவில் விஜய்க்கு நிகராக இருந்தவர் அஜித். ஆனால், விஜய் அரசியலுக்கு சென்றுவிட அஜித்தோ தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். அவரின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ஒரு வருடமாகியும் அஜித்தின் புதிய படம் தற்போது வரை துவங்கப்படவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அஜித் தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். மற்றொன்று அஜித் கேட்கும் 185 கோடி சம்பளத்தை கொடுக்க எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை..

தமிழ்நாடு, ஆந்திரா, மும்பை என பல மாநிலங்களுக்கும் சென்று தயாரிப்பாளர்களை தேடினார்கள். ஆனால் எல்லோரும் கைவிரித்துவிட்டனர். ஒரு கட்டத்தில் தானே படத்தை தயாரிப்பது என்கிற முடிவுக்கு அஜித் வந்தார். படத்திற்கு டேர் டேவில் என தலைப்பு வைக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பும் வெளியானது.

இந்த படத்தை குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் எனவும், படத்திற்கு அனிருத் இசை எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை ஷூட்டிங் துவங்கப்படவில்லை. சினிமாவை பொருத்தவரை யாரும் தனது சொந்த பணத்தை போட்டு படத்தை எடுக்க மாட்டார்கள்.. பைனான்ஸ் வாங்கியே படத்தை எடுப்பார்கள்..

எனவே கடந்த பல நாட்களாகவே பைனான்ஸியரை தேடி வந்தார் அஜித். இறுதியாக ஜஸ்வந்த் பண்டாரி மற்றும் சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகிய ஆகிய இரண்டு பைனான்சியர்களும் டேர் டேவில் படத்திற்கு பைனான்ஸ் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார்களாம்.. இரண்டு பேரிடமும் சேர்த்து ரூ.100 கோடி வாங்கி படம் எடுக்க அஜித் திட்டமிட்டிருக்கிறாராம்..

CR
ஆசிரியர்

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →