Dare Devil: No சொன்ன மோகன்லால்!.. அந்த நடிகருடன் பேச்சுவார்த்தை!.. டேர் டெவில் அப்டேட்!…

டேர் டெவில் படத்திலிருந்து மோகன்லால் விலகிவிட்டார்

ajith mohan

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தின் பெயர் டேர் டெவில் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த படம் தொடர்பாக ஒரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது. அதன்பின்னர்தான் அது AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது தெரியவந்தது.

அஜித் கார் ரேஸில் பிஸியாக இருப்பதால் அவரை வைத்து போட்டோஷூட் நடத்தாமல் AI மூலம் போஸ்டரை உருவாக்கியுள்ளனர். போஸ்டரை பார்க்கும்போது இதுவும் குட் பேட் அக்லி போல ஒரு டான் ஆக்சன் படமாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது..

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க மோகன்லாலிடம் பேசப்பட்டது. ஆனால் அவர் கேட்ட சம்பளம் அதிகமாக இருந்ததால் அதை தயாரிப்பாளர் அஜித் ஏற்கவில்லை. மோகன்லால் படத்திலிருந்து வெளியேறி விட்டார். அதேபோல் இந்த படத்தில் நடிக்க நடிகை ஸ்ரீலீலா ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் படப்பிடிப்பு தொடங்க தாமதமானதால் அவரும் நடிக்க முன்வரவில்லை..

எனவே வேறு நடிகர், நடிகைகளை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தேடி வருகிறார். மேலும், மோகன்லால் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சுதீப்பை நடிக்க வைக்கலாம் என்கிற எண்ணம் இயக்குனருக்கு வந்திருக்கிறதாம். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதேபோல் ஸ்ரீலீலாவுக்கு பதில் வேறு ஒரு நடிகையையும் இயக்குனர் தேடி வருகிறாராம்.

CR
ஆசிரியர்

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →