D56: இது எனக்கு செட் ஆகாது!. தனுஷ் படத்தில் நடிக்க மறுத்த வடிவேலு!.. மனசு மாறினது எப்படி?..

தனுஷ் படத்தில் நடிக்க வடிவேலு ஒப்புக்கொண்டதன் பின்னணி

dhanush

தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக இருந்தவர் வடிவேலு. ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் என்றெல்லாம் சம்பளம் வாங்கினார் வடிவேலு. ஒரு கட்டத்தில் பல கோடி சம்பளமும் வாங்கினார். ஆனால் கடந்த பல வருடங்களாகவே வடிவேலுவின் காமெடி திரையில் எடுபடவில்லை.

இடையில் நான்கு வருடங்கள் சினிமாவில் நடிக்காமலும் இருந்தார். அதன்பின் அவர் தொடங்கினாலும், அவர் ஹீரோவாக நடித்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை.அதேநேரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்தார் வடிவேலு..

தற்போது தனுஷின் புதிய படத்தில் வடிவேலு நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சிவகங்கை அருகே நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது. தனுசுடன் வடிவேலு இணையும் முதல் திரைப்படம் இது. பல வருடங்களுக்கு முன்பு சுராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் வடிவேலுதான் அசால்ட் ஆறுமுகமாக நடித்தார்.

ஆனால் வடிவேலுவின் நடத்தை தனுசுக்கு பிடிக்கவில்லை. எனவே அந்த படத்திலிருந்து வடிவேலு தூக்கப்பட்டு அவருக்கு பதிலாக விவேக்கை நடிக்க வைத்தனர். ஒருபக்கம் படப்பிடிப்பு தளத்தில் தனுசுக்கும், வடிவேலுவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வடிவேல் இந்த படத்திலிருந்து வெளியேறியதாகவும் ஒரு செய்தி இருக்கிறது..

இந்நிலையில்தான், அது நடந்து 16 வருடங்கள் கழித்து தனுஷின் புதிய படத்தில் வடிவேலு நடிக்க ஒப்புக்கொண்டதற்கு பின்னணியில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இந்த படத்தின் கதையை தமிழரசன் பச்சைமுத்து எழுதும் போதே இந்த கதாபாத்திரத்தில் வடிவேலுதான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். முதலில் இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பதாக இருந்தது. இவர் திமுக தலைமையின் நெருங்கிய உறவினர்.

கதையை கேட்ட வடிவேலு நான் சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்திருக்கிறேன்.. நடித்தால் காமெடியனாக மட்டுமே நடிப்பேன் என சொல்லி நடிக்க மறுத்திருக்கிறார். அதன்பின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் தரப்பிலிருந்து வடிவேலுவுடன் பேசி இந்த படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்தார்கள்..

ஒருபக்கம் கடந்த பல வருடங்களாகவே வடிவேலின் காமெடி எடுபடவில்லை. எனவே, வடிவேலு சீரியஸாக நடிப்பதே நல்லது எனவும் ரசிகர்கள் சொல்கிறார்கள்.

CR
ஆசிரியர்

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →