நட்சத்திர ஹோட்டலாக மாறும் ராகவேந்திரா மண்டபம்?.. என்ன காரணம்?..
ரஜினியின் ராகவேந்திர திருமண மண்டபம் தொடர்பான செய்தி

கோலிவுட்டில் முக்கிய நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரை சூப்பர் ஸ்டார் எனவும், தலைவர் எனவும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் நடிகர்களும் அழைக்கிறார்கள். 50 வருடங்களுக்கு மேல் திரைப்படங்களில் ரஜினி நடித்து வருகிறார். இந்த வயதிலும் ஆக்டிவாக கதாநாயகனாக நடித்து வருகிறார்.
நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார். ஜெயிலர் 2 திரைப்படம் வருகிற அக்டோபர் 15ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் இருக்கிறது. 1989ம் வருடம் இந்த மண்டபம் துவங்கப்பட்டது. ரஜினி தொடர்ந்து தனது ரசிகர்களை சந்திப்பதும் இந்த மண்டபத்தில்தான். சில வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வருகிறேன் என ரஜினி அறிவித்ததும் இந்த மண்டபத்தில்தான்.
மேலும் ஓய்வு நேரங்களில் நண்பர்களை சந்திப்பது, ரசிகர் மன்ற செயல்பாடுகளை ஒருங்கிணைக்கின்றது என பல முக்கிய நிகழ்வுகளுக்கு ரஜினிகாந்த் அந்த மண்டபத்தைதான் பயன்படுத்தி வந்தார்.
இந்நிலையில் இந்த மண்டபத்தை இடித்துவிட்டு அங்கு மூன்று நட்சத்திர ஹோட்டலை கட்ட ரஜினி தரப்பு திட்டமிட்டிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது.. இது தொடர்பாக ரஜினி தரப்பு விரைவில் விளக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.









