ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள Sigma சென்சார் ரிசல்ட் என்ன தெரியுமா?

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள முதல் படம் ‘சிக்மா’.

Sigma

தமிழ்நாட்டின் முதலமைச்சரும், நடிகருமான ‘தளபதி’ விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் ரெடியாகி உள்ள புதிய படம் தான் ‘சிக்மா’.

இதில் கதாநாயகன் ஆக சந்தீப் கிஷனும், கதாநாயகி ஆக ஃபரியா அப்துல்லாவும் நடித்துள்ளனர். இதுக்கு தமன் எஸ் இசையமைத்திருக்கிறார், கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இந்த படத்தில் முக்கிய வேடங்களில் ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், மஹாலக்ஷ்மி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது, இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் U/A 16+ சான்றிதழ் கொடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்தை வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

CR
ஆசிரியர்

siva

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →