மைசூரில் நடக்கும் Dharman ஷூட்டிங்கில் இப்படி ஒரு தப்பை பண்ணிய ராஷி கண்ணா!
‘தர்மன்’ படத்தில் ராஷி கண்ணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

‘உலக நாயகன்’ கமல் தயாரிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகி கொண்டிருக்கும் படம் தான் ‘தர்மன்’. இதில் கதாநாயகன் ஆக நம்ம ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
இதை ‘டிராகன், ஓ மை கடவுளே’ ஆகிய படங்களை பண்ண அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறாராம். இதன் ஷூட்டிங் மைசூரில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகை ராஷி கண்ணா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ரஜினி மற்றும் தெலுங்கு நடிகர் ராம் பொதினேனியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இன்று காலை ஷேர் செய்து விட்டார்.

இப்படத்தில் ராம் பொதினேனி தான் வில்லனாம். ஆனால், அவர் நடிப்பதை இன்னும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதற்குள் ராஷி கண்ணா இப்படி ஒரு தப்பை செய்து விட்டார். பின், சில நிமிடங்களில் இப்புகைப்படத்தை அவரே நீக்கி விட்டார்.












