ரஜினியின் முரட்டுத்தனம்… படிக்கும் போதே போலீஸ்நிலையம் வரை சென்ற அதிர்ச்சி சம்பவம்…

Rajinikanth: ரஜினிகாந்த் சினிமாவில் மட்டுமல்ல தன்னுடைய இளமை காலத்திலும் ரொம்பவே முரட்டுத்தனமாகவே இருந்து வந்தார். அது அவருக்கு பெரிய பிரச்னையையும் கூடவே அழைத்து வந்தது குறித்தும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ரஜினிகாந்த் படித்து பெரிய போலீஸ் அதிகாரியாக வருவார் என்பது ரஜினியின் தந்தை ரானோஜியின் ஆசையாக இருந்தது. ஆனால் ரஜினியோ முரட்டு குணத்துடன் மது அருந்துவது, பெண்களை விரட்டுவது போன்ற விஷயங்களை செய்து வந்தார்.

இதையும் படிங்க: காலங்காலமாக இந்த நடிகருக்கு நன்றிக்கடன் பட்டவன் நான்! யாரை சொன்னார் தெரியுமா வடிவேலு?

ரஜினியே இதை தன்னுடைய பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். அப்படி ஒருமுறை தன்னுடைய பருவ வயதில் அவர் செய்த விஷயங்களை தெரிவித்து இருக்கிறார். ரஜினிக்கு சின்ன வயதிலே எல்லா அந்தரங்க விஷயமும் தெரியுமாம். கிட்டத்தட்ட அவர் யாருக்குமே அடங்காத காளையாகவே திரிந்து இருக்கிறார்.

இவரை திருத்த எண்ணிய குடும்பத்தினர் 16 வயதில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் சேர்த்துவிட்டனர். அங்கு சொல்லிய வழிபாடு, பிராணயாமம் ரஜினியை கொஞ்சம் மட்டுப்படுத்தியதாம். ஆனால் மீண்டும் படிப்பு முடிந்தவுடன் மூத்த வயது நண்பர்கள் கிடைக்க முரட்டுத்தனமும் வந்ததாம்.

இதையும் படிங்க: 22 முறை அஜீத்துடன் மோதிய பிரசாந்த் படங்கள்!. ஜெயித்தது அல்டிமேட் ஸ்டாரா?.. டாப் ஸ்டாரா?..

ரஜினியின் தந்தை ரானோஜி ராவ் தலைமை போலீஸ் அதிகாரி. தன்னுடைய பணிக்காலத்தில் சிறந்த சேவை செய்ததற்காக அரசாங்க விருது பெற்றவர் என்பதை அறிந்து கொண்ட போலீஸ்காரர்கள் ரஜினியை வீட்டில் கொண்டு போய்விட்டு விஷயத்தினை கூறிவிட்டார்களாம்.

இதை கேட்ட ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணாவுக்கு கோபம் தலைக்கேறியது. ரஜினியை செம்மையாக அடித்து வெளுத்துவிட்டார். எல்லாரையும் தன் பக்கம் திருப்ப வேண்டும் என்ற முரட்டுத்தனத்தால் வாழ்க்கையை அழித்துக்காதே என குடும்பமே கெஞ்சி அவருக்கு அறிவுரை சொல்லி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: ஷங்கருக்கு ஆர்டர் போடுற இடத்துல இருந்தவர் டேனியல் பாலாஜி! அட இதெல்லாம் எப்ப நடந்தது?

 

Related Articles

Next Story