Cinema History
கண்ணதாசனுக்கு வந்த காதல்!.. பாடல் வரிகளில் இறக்கிய கவிஞர்!.. அட அந்தப் பாடலா?..
கவியரசர் கண்ணதாசனின் முதல் காதல் கவிதை பாடலானது. அது எந்தப் படத்தில் எந்தப் பாடலில் வருகிறது என்று பார்ப்போமா…
கண்ணதாசனுக்கு பால்ய பருவத்தில் அப்பழுக்கில்லாத காதல் வருகிறது. அந்தக் காலகட்டத்தில் அந்தப் பொண்ணுக்குத் திருமணமாகிறது. நம்மை பிடிக்காமல் தான் வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டாரோ என்று எண்ணுகிறார் கவியரசர். ஆனால் அவர் நண்பரோ அந்தப் பெண் சிலையாக நின்றதாகக் கூறுகிறார்.
தனது காதலை தளிர், இலை, சருகு என உருவகப்படுத்தி கவியரசர் பாடலை எழுதியிருப்பார். பாவாடை கட்டி மரப்பாவை கரத்தில் ஏந்தி பூவாடை வீச புதுப்புனலின் நுரை போல என்று தொடரும் ஒரு கவிதையை எழுதியிருந்தார். இந்தக் கவிதையை பின்னாளில் நிச்சயத்தாம்பூலம் படத்தில் பாடலாகக் கொண்டு வந்திருப்பார். இசை அமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி. பாவாடை தாவணியில் பார்த்த உருவமா என்ற பாடல். இதைப் பாடியவர் டிஎம்.சௌந்தரராஜன்.
இது ஒரு முதலிரவு பாடல். ஏற்கனவே காதலித்து தான் கல்யாணம் பண்ணியிருப்பார்கள். பாவாடை தாவணியில் பார்த்த உருவமா, இது பூவாடை வீசி வர பூத்த பருவமா, பாலாடை போன்ற முகம் மாறியதேனோ, பனி போல நாணம் அதை மூடியதேனோ என்று அந்த பல்லவி வரும்.
அடுத்த சரணத்தில் வா வென்று கூறாமல் வருவதில்லையா, காதல் தாவென்று கேளாமல் தருவதில்லையா, சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா, இன்பம் சுவையாக சுவையாக வளர்வதில்லையா என்று காதலின் வளர்ச்சியை வெகு யதார்த்தமான நடையில் சொல்லியிருப்பார் கவியரசர். அடுத்த சரணத்தைப் பாருங்கள். தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா, நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா? அப்படி மட்டுமா சொல்கிறார். அடுத்து தமிழின் சுவையைக் காதலியுடன் ஒப்பிடுகிறார்.
காதலில் விழுந்ததும் என்னென்னவெல்லாம் நடக்கிறது பாருங்கள். இங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும் ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும், மங்கை உனை தொட்ட உடன் மறைந்து விட்டாலும் நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன். அதாவது காதலியைத் தொட்ட உடன் நான் நான் இல்லை. அதாவது நான் உன்னைத் தொட்டு விட்டால் நான் நீ ஆகலாம். அல்லது என் ஆசைகள் முடிந்து போகலாம்.
இதையும் படிங்க… விடாமுயற்சி படப்பிடிப்பில் கவிழ்ந்த ஜீப்!.. அஜித்துக்கு என்னாச்சி?!.. வெளியான அதிர்ச்சி வீடியோ!..
அதாவது காலம் காலமாக பெண்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் நீ தான் என் கணவனாகணும்னு சொல்வாங்க. ஆனால் இங்கு கவியரசர் நான் ஆணாக இருந்தாலும் எனக்கும் உன் மேல் ஆசை இருக்கு. அதனால் ஒருவேளை நான் இறந்து போனால் மறுபடியும் பிறக்கும்போது உன்னைத் நான் திருமணம் செய்து கொள்வேன் என்கிறார்.
மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.