Cinema History
வந்துட்டான்யா.. வந்துட்டான்யா.. வடிவேலு – பார்த்திபன் காம்போவில் பட்டையைக் கிளப்பிய படங்கள்!..
தமிழ்ப்பட உலகில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப காமெடியிலும் புதுமையான முறை வந்தவண்ணம் இருந்தது. செந்தில், கவுண்டமணி கால காமெடி மெல்ல குறைந்து வரும்போது விவேக், சந்தானம், வடிவேலு படங்கள் வர ஆரம்பித்தன. அதன்பிறகு யோகிபாபு வந்து அசத்த ஆரம்பித்து விட்டார்.
இப்போது கவுண்டமணி, செந்திலுக்கு எப்படி ஒரு மார்க்கெட் இருந்ததோ, அதற்கு நிகராக பார்த்திபனுக்கும், வடிவேலுவுக்குமான காமெடி ட்ரெண்ட் செட்டாகின. அந்த வகையில் வந்தப் படங்களைப் பார்த்தால் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து அவர்கள் வயிறே புண்ணாகி விடும்.
இவர்கள் இருவரது காமெடியிலும் வந்துட்டான்யா… வந்துட்டான்யா, என்ன குண்டக்க மண்டக்க, அதென்ன நல்ல மீன்கள் விற்கப்படும், இந்த குத்துக்கு என்ன மதிப்பு ஆகிய காமெடிகள் வயிறு வலிக்க சிரிக்க வைப்பவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காமெடிகளை எல்லாம் பார்த்தால் பார்த்திபனிடம், வடிவேலு வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட கதையாகத் தான் இருக்கும். அப்படிப்பட்ட படங்கள் எவை எவை என்று பார்ப்போமா…
பாரதி கண்ணம்மா
1997ல் சேரன் இயக்கிய படம். பார்த்திபன், மீனா, விஜயகுமார், வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பார்த்திபன், வடிவேலு காமெடிகள் பட்டையைக் கிளப்பியது. தேவாவின் இசையில் பாடல்கள் செம. இந்தப் படத்தில் வைகைப்புயல் வடிவேலுவுக்காக ஒரு பாடலே கொடுக்கப்பட்டுள்ளது. ரயிலு புல்லட் ரயிலு என்ற அந்தப் பாடலை சொந்தக்குரலில் பாடி ஆடி அசத்தினார்.
இதையும் படிங்க… கண்ணதாசனுக்கு வந்த காதல்!.. பாடல் வரிகளில் இறக்கிய கவிஞர்!.. அட அந்தப் பாடலா?..
காக்கை சிறகினிலே
2000த்தில் பி.வாசு இயக்கத்தில் வெளியான படம். பார்த்திபன், ப்ரீத்தா, வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அருமை. இந்தப் படத்தில் பார்த்திபன், வடிவேலு வரும்போதெல்லாம் ஒரே சிரிப்பு மயம் தான்.
காதல் கிறுக்கன்
2003ல் வெளியான படம். சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார். பார்த்திபன், ரிச்சா பல்லோட், வினித், வடிவேலு, ஸ்ரீமன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்திலும் பார்த்திபன், வடிவேலு காம்போ காமெடிகள் பட்டையைக் கிளப்பும். இதில் வடிவேலு கல்யாண சுந்தரமாக வந்து கலக்குவார்.
வெற்றிக் கொடி கட்டு
2000த்தில் சேரன் இயக்கி சக்கை போடு போட்ட படம். பார்த்திபன், முரளி இணைந்து நடித்த படம். மீனா, மாளவிகா உள்பட பலர் நடித்துள்ளனர். தேவாவின் இசையில் பாடல்கள் தெவிட்டாத ரகங்கள். வெளிநாட்டுக்குப் போய் கஷ்டப்பட்டு வேலை பார்த்து விட்டு உள்ளூர் வந்து பில்டப் பண்ணும் வடிவேலுவை பங்கமாய் கலாய்ப்பார் பார்த்திபன்.
குண்டக்க மண்டக்க
படத்தின் பெயரே ஒரு பார்த்திபன், வடிவேலுவின் காமெடி தான். அந்த அளவு அப்போது இவர்களது காமெடி ட்ரெண்டாகி இருந்தது. 2005ல் அசோகன் இயக்கிய இந்தப் படத்தில் பார்த்திபனுடன், ராய்லட்சுமி, மல்லிகா, வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர். பரத்வாஜ் இசை அமைத்துள்ளார். படத்தில் காமெடி குண்டக்க மண்டக்க இருந்து களைகட்டும்.