Connect with us
apfe

Cinema News

ஜஸ்டு மிஸ்… இல்லேன்னா இவருதான் ‘ஆக்சன் கிங்’.. ஆறடி நடிகரை அரவணைத்த கேப்டன்..

“சிதம்பர ரகசியம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முகத்தை காட்டியவர் அருண்பாண்டியன். தென் மாவட்டங்களில் இருந்து சினிமாவிற்கு வந்து சாதித்தவர்களில் இவரும் ஒருவர். ஆறு அடிக்கு மேல் உயரம், கருத்த தேகம். முரட்டு தோற்றம் நடித்த படங்களில் சண்டை காட்சிகள் சூப்பர் ஹிட். இதனால் இவரை சுத்தி வர துவங்கியது ரசிகர்கள் கூட்டம். அதிலும் பெண் ரசிகைகள் மிக அதிகம்.

“ஊமைவிழிகள்” திரைப்படம் இவரை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்றது. ‘கேப்டன்’ விஜயகாந்த் இந்த படத்தில் நடிக்க “கரும்பு தின்ன கூலியா” என்பது போலத்தான் ஆனது அருண் பாண்டியனின் நிலை. எதிர்பார்த்ததை விட படம் ‘சூப்பர் டூப்பர் ஹிட்’. கூடவே விஜயகாந்துடன் நெருங்கிய பழக்கம். வண்ணமயமான எதிர்காலத்தை நோக்கி நகர்ந்தது அருண்பாண்டியனின் வாழ்க்கை.

இவர் படங்களில் ‘ஆக்சன்’ காட்சிகள் அதிகம் ஹிட் ஆக, கிடைத்து விட்டார் தமிழ் சினிமாவிற்கு ஒரு ‘அதிரடி நாயகன்’ என்று நினைக்க வைத்தது.  ஆனால், அப்போதுதான் தொடர் ‘ஹிட்’ படங்களை கொடுத்து ரசிகர்களை தன்னை உற்று நோக்க வைத்தார் அர்ஜூன். எனவே, ‘ஆக்சன் கிங்’ பட்டம் அவருக்கு கிடைத்தது.

arjn

arjn

“இணைந்த கைகள்” அருண்பாண்டியனின் பெயரை பட்டி, தொட்டி எங்கும் பேச வைத்த வெற்றிப்படம். ராம்கியுடன் கைகோர்த்து வெளியிடப்பட்ட படம். இருவரின் வாழ்வில் இது ‘மைல் கல்லாக’ மாறியது.

தனது கலையுலக நண்பரான விஜயகாந்த் கட்சி துவங்கிய நேரம் அது. கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, பேராவூரணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். மேலும் விஜயகாந்தின் அபிமானம் பெற்றவர்களில் ஒருவராகவும் இவர் இருந்துவந்தார். நாளடைவில் விஜயகாந்துடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் அவர் அங்கம் வகித்த கட்சியலிருந்து வெளியேறினார்.

vjk

vjk

தனது விலகல் குறித்து காரணத்தை விஜயகாந்த்திடம் சொல்ல சென்ற நேரத்தில் தான் உணர்ச்சிவசப்பட்டதாகவும், அப்பொழுது கூட விஜயகாந்த் அன்பாக ‘மொதல்ல உட்காரு பாண்டி’ என சொன்னாராம், எவரையும் மதிக்கும் நல்ல மனம் கொண்டவர் கேப்டன், நாமெல்லாம் அவரை இழந்து விட்டோம் என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Continue Reading

More in Cinema News

To Top