Cinema News
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!.. ஜி.வி. பிரகாஷின் அடுத்த தரமான சம்பவம்.. இன்னொரு குறட்டை படமா?..
ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி உள்ள டியர் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. நேற்று வெளியான கள்வன் படத்தில் ஜி.வி. பிரகாஷ் பண்ண தரமான சம்பவத்தையே ரசிகர்கள் இன்னமும் ஜீரணிக்க முடியாமல் உள்ளனர்.
இந்நிலையில், அடுத்த வாரம் ஒரு ஸ்பெஷல் ஐட்டத்துடன் ஜி.வி. பிரகாஷ் குமார வர காத்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஏற்கனவே வந்த கதையை எடுப்பதும், ரீமேக், காப்பி பண்ணுவது எல்லாம் தமிழ் சினிமாவில் கை வந்த கலைதான்.
இதையும் படிங்க: விஜயகாந்தும் முரளியும் இந்த விஷயத்துல ஒரே மாதிரி!.. மனம் உருகும் பிரபல நடிகர்!…
ஆனால், அதற்கென கடந்த ஆண்டு வெற்றிப் பெற்ற ஒரு படத்தை அப்படியே உல்டாவாக எடுத்து ரிலீஸ் செய்வதெல்லாம் அநியாயம் பாஸ் என ரசிகர்களே கலாய்த்து வருகின்றனர். மணிகண்டன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான குட் நைட் படத்தில் குறட்டை தானே மெயின் தீம். அதே தீமுடன் உருவாகி உள்ள படம் தான் இந்த டியர்.
ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷுக்குத்தான் இந்த படத்தில் குறட்டை விடும் பழக்கமாம். சரியாக தூக்கம் இல்லாமல் கஷ்டப்படும் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஐஸ்வர்யா ராஜேஷை கட்டி வைக்கின்றனர். அதனால், ஏற்படும் பிரச்சனை விவாகரத்து வரை செல்வதாகவும் பின்னர் எப்படி இருவரும் கடைசியில் ஒன்று சேரப் போகின்றனர் என்பது தான் படத்தின் கதையாகவே இருக்கும் என்பது டிரெய்லரை பார்த்ததும் தெரிந்து விடுகிறது.
இதையும் படிங்க: வடிவேலு காமெடியால் வந்த பிரச்சனை!.. கூட்டமாக வந்த போலீஸ்!.. பதறிப்போன வைகைப்புயல்!..
ஆனால், விஷுவலாகவும் மேக்கிங்காகவும் குட் நைட் படத்தை விட குவாலிட்டியாகவும் வித்தியாசமாகவும் உழைத்திருக்கின்றனர் என தெரிகிறது. படம் சுவாரஸ்யம் இருந்தால் கூட ஜி.வி. பிரகாஷ் கடைசியாக பண்ண ரெபல் மற்றும் கள்வன் படங்களை பார்த்த ஜி.வி. பிரகாஷ் ரசிகர்களே மீண்டும் நம்பி தியேட்டருக்கு வருவார்களா என்பதே டவுட்டு தான் எனக் கூறுகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் இப்படி கேப் விடாமல் தமிழ் சினிமாவை காப்பாற்ற ஜி.வி. பிரகாஷ் போராடுவதை பார்த்தால் நமக்கே புல்லரிக்கிறது என பலரும் கலாய்த்து வருகின்றனர். அந்த கங்குவா, தங்கலான் படங்களையாவது இறக்குங்களே பாஸ்!