Connect with us

Cinema News

வரிசையா செஞ்சுரி அடிக்கும் மல்லுவுட்!.. ஆட்டநாயகனாக மாறிய ஆடுஜீவிதம்!.. இத்தனை கோடி வசூலா?

இந்த ஆண்டு மலையாள திரையுலகம் இதுவரை ஹாட்ரிக் செஞ்சுரிக்களை அடித்து மாஸ் காட்டி வருகிறது. குறைந்த பட்ஜெட்டில் 100 கோடி வசூலை ஈட்டுவதெல்லாம் மலையாள திரையுலகத்துக்கு மட்டுமே வந்த கைவந்த கலை என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

படம் மொக்கையாக இருந்தாலும் வசூல் மட்டும் வந்து வெற்றிப் பெறுவது எல்லாம் ஒரு வெற்றியே கிடையாது என்றும் வசூல் ரீதியாக வெற்றியடைவதை விட பலரது பாராட்டுக்களுடன் விமர்சன ரீதியாக வெற்றிப் பெறுவதே சிறந்த வெற்றி என மலையாள ரசிகர்கள் காலரை தூக்கி விட்டு கெத்தாக மாஸ் காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: வெளிநாட்டில் பாஸ்போர்ட்டை மிஸ் பண்ண குமரிமுத்து! மறுநாள் சூட்டிங்.. எப்படி வந்தார் தெரியுமா

இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டிய நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் அதிரடியாக டபுள் செஞ்சுரி அடித்து 200 கோடி ரூபாய் வசூல் ஈட்டி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது.

இந்நிலையில், நாங்களும் போட்டிக்கு வரலாமா என களத்தில் இறங்கிய பிருத்விராஜ் தனது ஆடு ஜீவிதம் படத்தின் மூலம் 100 கோடி வசூலை 2 வாரங்களில் அள்ளி உள்ளார். வெள்ளிக்கிழமை ஓட்டத்துடனே 100 கோடி வசூலை ஆடு ஜீவிதம் படம் ஈட்டிய நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வேறு எந்தவொரு பெரிய படமும் இல்லாத நிலையில், இந்த வாரமும் ஆடு ஜீவிதம் மேலும், வசூலை ஈட்டி 150 கோடிக்கு மேல் வசூலை ஒட்டுமொத்தமாக அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அண்ணாவை விட்டு அல்லு பக்கம் போன அட்லீ… கமலை வச்சி தளபதியை தூக்கிய எச்.வினோத்!..

பென்யமின் எழுதிய கோட் டேஸ் நாவலை தழுவி பிளஸ்சி இயக்கிய ஆடு ஜீவிதம் படத்தில் பிருத்விராஜ் பாலை வனத்தில் கஷ்டப்பட்டு தப்பித்து வந்த நஜீப் எனும் நிஜ மனிதரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக நடித்திருந்தார்.

அமலா பால் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், அவர் வரும் காட்சிகள் எல்லாம் ஜில்லென இருக்கும் விதமாக ரொம்பவே ரம்மியமாக படமாக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது. ஆடு ஜீவிதம் திரைப்படம் ஹிட் அடித்த நிலையில், அடுத்த மலையாள படம் இந்த ஆண்டு செஞ்சுரி அடிக்க அடுத்து ரிலீஸ் ஆகப் போகுது என ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top