Connect with us
vinoth vijay atlee

Cinema News

அண்ணாவை விட்டு அல்லு பக்கம் போன அட்லீ… கமலை வச்சி தளபதியை தூக்கிய எச்.வினோத்!..

நடிகராக இருந்து வரும் விஜய் தற்பொழுது கட்சி துவங்கி மக்கள் சேவைக்காக தன்னை தயார்படுத்தி வருகின்றார். இந்நிலையில் அவரது “கோட்”. படம் முடிவடையும் நிலையில் இருப்பதால் தங்களது அபிமான நடிகரை  எப்போது திரையில் பார்ப்போம் என்கிற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர் அவரின் ரசிகர்கள்.

அவரது கடைசி படமாக இருக்கலாம் என்று கருத்தப்படக்கூடிய அவரது அடுத்த படத்தை யார் இயக்க போகிறார் என்கின்ற ஆவல் இப்பொழுதே பிறக்க துவங்கியுள்ளது. அட்லீ இயக்கினால் நன்றாக இருக்கும் என பலரும் எதிர்பார்திருந்தனர்.

இதையும் படிங்க: இருந்தாலும் ஓவர் சீன் தான்!.. பிறந்தநாளை ராஷ்மிகா எங்கே கொண்டாடியிருக்காரு பாருங்க!..

அப்படி இருக்கையில் அட்லீயோ, அல்லு அர்ஜுனை வைத்து .அடுத்த படத்தை இயக்குவதிலேயே குறியாக இருந்து வருகின்றாராம். அல்லு நடித்த “புஷ்பா 2” படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.  இதன் பிறகு அட்லீயும், இவர் இணைவது கிடத்தட்ட உறுதியாகி விட்டது.

இதனிடையே பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லீ எடுத்த “ஜவான்” திரைப்படம் வரவேற்பை பெற்று ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தொட்டது. தமிழகத்தில் மட்டுமே அறிந்திருக்கப்பட்ட அட்லீ இப்பொழுது இந்தியா முழுவதும் பிரபலம் ஆகிவிட்டார்.

“தெறி”, “மெர்சல்”, “பிகில்” என விஜயும், அட்லீயும் இணைந்த படங்கள் செம ஹிட். இதனாலேயே இந்த கூட்டனி மீண்டும் இணையுமா? என இவர்களை பற்றிய எதிர்பார்ப்பு இதற்கு முன்னரே அதிகமாக இருந்த நிலையில். விஜயின் கடைசி படமாக இருக்கலாம் என்கின்ற சூழல் நிலவும் நேரத்தில் இவர்கள் இணைய மாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!.. ஜி.வி. பிரகாஷின் அடுத்த தரமான சம்பவம்.. இன்னொரு குறட்டை படமா?..

இருவருக்கும் கால்ஷீட் பிரச்சனை இருப்பதால் யார் சரியான முடிவினை தருவார் என யோசித்த விஜய் தரப்பு அவர்களின் நலம் விரும்பி ஒருவரின் பேச்சிற்கு முக்கியத்துவம் கொடுத்து, தற்பொழுது எச்.வினோத்தையே படம் இயக்க சொல்லாம் என முடிவெடுத்து அவரின் சம்மதத்தை பெற்று விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது.

கமல்ஹாசனுக்காக அவர் எழுதி வைத்திருந்த புரட்சிகரமான, அரசியல் ரீதியான கதையை விஜய்க்கு பயன்பெரும் என நலன்விரும்பி கூறியதன் அடிப்படையில் எச்.வினோத்தை அணுகினார்களாம். எது எப்படி இருந்தாலும் ஆரம்பத்தில் விஜயாலே வாழ்வு பெற்ற அட்லீ தனது முடிவை மாற்றி தங்களின் அண்ணாவுடன் இணைய வேண்டும் என்பதுவும் ரசிகர்களின் பிரார்த்தனையாக கூட இருக்கலாம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top