Connect with us

Entertainment News

இருந்தாலும் ஓவர் சீன் தான்!.. பிறந்தநாளை ராஷ்மிகா எங்கே கொண்டாடியிருக்காரு பாருங்க!..

நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தனது 28 ஆவது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். காலை முதலே புஷ்பா 2 பட குழுவினர் ஸ்ரீ வள்ளியின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து கேர்ள் ஃப்ரெண்ட் எனும் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருவதாக போஸ்டர் ஒன்று வெளியானது.

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது பிறந்த நாளை கோலாகலமாக கேக் வெட்டி கொண்டாடி இருப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்தால் ஷாக்கிங் ஆகத்தான் இருக்கும். இந்த அளவுக்கு எளிமையாக நடிகை பிறந்தநாளை கொண்டாடுவதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!.. ஜி.வி. பிரகாஷின் அடுத்த தரமான சம்பவம்.. இன்னொரு குறட்டை படமா?..

ஜிம்மில் ரொம்பவே சாதரணமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு தனக்குத்தானே ஹாப்பி பர்த்டே என சொல்லிக் கொண்டு ரொம்பவே எளிமையாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் உலக மகா நடிப்புடா சாமி நாளைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகும் பாருங்கள் என கலாய்த்து வருகின்றனர். இன்று காலையில் ஜிம்மில் எட்டிப்பார்த்த வீடியோவை வைத்து இப்படி ஒரு ரீல்ஸ் போட்டு இருக்கிறார் பர்த்டே பேபி என கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜயகாந்தும் முரளியும் இந்த விஷயத்துல ஒரே மாதிரி!.. மனம் உருகும் பிரபல நடிகர்!…

கடந்த ஆண்டு ராஷ்மிகா மந்தனா விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்திலும் பாலிவுட்டில் ரன்பீர் கபூர் நடித்து வெளியான அனிமல் படத்திலும் நடித்திருந்தார். வாரிசு திரைப்படம் 300 கோடி வசூல் ஈட்டிய நிலையில், அனிமல் திரைப்படம் 900 கோடி வசூலை ஈட்டியது.

அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் புஷ்பா 2, தமிழில் தனுஷுடன் குபேரா ஹிந்தியில் சில படங்கள் என வரிசையாக கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கிறார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/C5Ygr5jN34k/

google news
Continue Reading

More in Entertainment News

To Top