எம்.ஜி.ஆருக்கு நான்.. உனக்கு வைரமுத்தா?!.. ஒரு பாட்டு சொல்லு!.. ரஜினியிடம் கோபப்பட்ட வாலி!..

X
எம்.ஜி.ஆருக்கு நான்.. உனக்கு வைரமுத்தா?!.. ஒரு பாட்டு சொல்லு!.. ரஜினியிடம் கோபப்பட்ட வாலி!..

மறைந்த நடிகர் மற்றும் தமிழகத்தின் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பிரதான மற்றும் பிடித்த பாடலாசிரியராக இருந்தவர் கவிஞர் வாலி.
துவக்கத்தில் எம்.ஜி.ஆருக்கு கண்ணதாசனே பாடல்களை எழுதினார். ஆனால் அரசியல்ரீதியாக இருவருக்கும் முரண்பாடு ஏற்பட்டது. ஏனெனில் கண்ணதாசன் காங்கிரசை ஆதரித்தார்.

எம்.ஜி.ஆர் திமுகவை ஆதரித்தார். இதனால் பொதுக்கூட்டங்களில் எம்.ஜி.ஆருக்கு எதிராக கடுமையாக பேசினார் கண்ணதாசன். இதன் காரணமாக அப்போது வளர்ந்து கொண்டிருந்த கவிஞர் வாலியை தனது படங்களுக்கு பாடல்களை எழுத வைத்தார் எம்.ஜி.ஆர்..

கவிஞர் வாலியும் எம்.ஜி.ஆருக்கு சிறப்பான பாடல்களை எழுதினார். குறிப்பாக எம்.ஜி.ஆர் தன்னை அரசியல்ரீதியாக மக்களிடம் புரமோட் செய்து கொண்ட பாடல்களை வாலி மிகவும் சிறப்பாக எழுதினார். இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆர் மக்களுக்காக உழைப்பார் என்கிற இமேஜை அந்த பாடல் வரிகள்தான் மக்களிடம் உருவாக்கியது என்று கூட சொல்லலாம். தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக மூன்று முறை வெற்றி பெற்றார் எம்ஜிஆர்..

தற்போது விஷயத்திற்கு வருவோம்.. எந்திரன் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி ‘எம்.ஜி.ஆருக்கு ஒரு வாலி என்றால் எனக்கு வைரமுத்து’ என்று பேசியிருந்தார். அது நடந்து சில நாட்களில் கவிஞர் வாலிக்கு தனது மகளின் திருமண பத்திரிக்கையை கொடுப்பதற்காக ரஜினி சென்றார்.

அப்போது ‘என்னையா எம்.ஜி.ஆருக்கு ஒரு வாலின்னா எனக்கு வைரமுத்துன்னு பேசியிருக்க.. ‘நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று’… ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சுருக்கும்’.. ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’.. ‘நான் செத்து பிழைச்சவன்டா’.. இதெல்லாம் எம்.ஜி.ஆர் மட்டும்தான்யா பாடமுடியும்.. அதுமாதிரி நீ மட்டுமே பாடுற மாதிரி வைரமுத்து எதாவது எழுதியிருக்காரா?.. நீ எம்.ஜி.ஆர் ஆகு.. வைரமுத்துவ வாலி ஆக்காத’ என சொன்னாராம்.