அஜித்தை அடியோடு மாற்றிய ஷாலினி..! அட இவ்ளோ விஷயம் நடந்துருக்கா?

X
அஜித்தை அடியோடு மாற்றிய ஷாலினி..! அட இவ்ளோ விஷயம் நடந்துருக்கா?

அஜித்தைப் பற்றி பேசுகின்ற யாரும் அவரோட தன்னம்பிக்கையைப் பற்றி பேசாமல் இருக்கவே மாட்டார்கள். அவருடைய வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் அவரது அயராத உழைப்பு. அவரது தன்னம்பிக்கை என்பதுதான் திரையுலகில் பலரது கருத்து. ஆனால் அவரது வளர்ச்சியிலே அவரது காதல் மனைவி ஷாலினியின் பங்கு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இதைப் பலரும் அறிவதில்லை.

ஒரு காலத்தில் அஜித்தைப் பொருத்தவரை அவருக்கு எல்லாமே நண்பர்கள்தான். அவர்கள் சொன்னதையே கேட்டு திரைப்பட விநியோகம் உள்பட பல தொழில்களை ஆரம்பித்தார். கோடிக்கணக்கில் அவற்றில் முதலீடு செய்தார். ஆனால் அதில் ஏதாவது திரும்பி வந்ததா என்றால் இல்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம். பல கோடிகளை அதில் இழந்தார்.

அப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையில் அவருக்கு ஆதரவாக இருந்தது அவரது மனைவி ஷாலினி மட்டுமே. அந்தப் பிரச்சனைகளுக்குப் பின்னால்தான் திரை விழாக்கள் உள்பட அஜித் எங்கு போனாலும் அவருடன் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார் ஷாலினி. அது மட்டும் இல்லாமல் புதிய படங்களின் கதைகளைக் கேட்கும் போது எல்லாம் அவருடன் இருக்கத் தொடங்கினார் ஷாலினி.

ஒரு நடிகரின் வாழ்க்கைப் பயணத்தில் அவருடைய மனைவியின் பங்கு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இன்று வரை இருப்பவர்தான் ஷாலினி என்று சொன்னால் அது மிகையாகாது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.