தங்களுக்குப் பிடித்த கலைஞர்களைப் பதிவு செய்வதில் பிரபலமான கலைஞர்களுக்கு எப்பவுமே ஒரு தயக்கம் இருக்கும். அப்படி எந்த ஒரு தயக்கமும் இல்லாம, எனக்குப் பிடித்த நடிகர் சிவாஜிகணேசன், பிடித்த நடிகை ஜெயலலிதா என்று ஒரு பத்திரிகையில் பதிவு செய்துள்ளார் புதுமை இயக்குனர் ஸ்ரீதர்.
சிவாஜி இடத்தை நிரப்புவதற்கு இங்கு யாருமே இல்லை. அதே மாதிரி ஜெயலலிதாவோட கூர்மையான அந்தக் கவனிப்பும் எந்த நடிகைக்கும் இல்லை என்று சொல்லி இருக்கிறார் ஸ்ரீதர். தனக்குப் பிடிக்காத படத்தைப் பற்றியும் அந்தப் பத்திரிகையில் பதிவு செய்துள்ளார். நான் இயக்கிய படங்களில் ஒரு சில படங்கள் எனக்குப் பிடிக்காது.
நான் இயக்கிய படங்களில் மிக மோசமான படம்னா கமல் நடித்த நானும் ஒரு தொழிலாளி. அப்படி அந்தப் படம் மோசமாக அமைந்ததுன்னா அதுக்கு முக்கியமான காரணம், நான் அந்தப் படத்தை உருவாக்கிய காலகட்டத்தில் ஒரு ஃபேக்டரியையும் நிர்வகித்துக் கொண்டு இருந்தேன்.
இரண்டிலும் கவனம் செலுத்தப் போய் கடைசியில இரண்டிலும் முழுமையான கவனத்தை செலுத்த முடியாமல் போனது என்பதுதான் உண்மை. அதன் காரணமாகத்தான் அந்தப் படம் சரியாக அமையவில்லை என்றும் அதே பேட்டியில் பதிவு செய்துள்ளார் ஸ்ரீதர்.















