Connect with us
Ajith Vs Kamal

Cinema News

14 முறை கமலுடன் மோதிய அஜித் படங்கள்!.. ஜெயித்தது யாரு?.. உலக நாயகனா? அல்டிமேட் ஸ்டாரா?..

தமிழ்த்திரை உலகில் உலகநாயகன் கமல், அல்டிமேட் ஸ்டார் அஜீத் படங்கள் என்றாலே ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். இருவரும் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை. என்றாலும் இவர்களது படங்களும் மோதிக்கொண்டுள்ளன. என்னென்ன? யார் ஜெயித்ததுன்னு பார்க்கலாமா…

1993க்கு கமலுக்கு கலைஞன் படமும், அஜீத்துக்கு அமராவதி படமும் ரிலீஸ். இதுல கமல் தான் வின்னர். 1994ல் கமலுக்கு நம்மவர். அஜீத்துக்கு பவித்ரா ரிலீஸ். இதுல கமல் படம் செம மாஸ். 3 தேசிய விருதுகள் பெற்ற படம். கமல் தான் வின்னர். அதே ஆண்டில் கமலுக்கு மகாநதி, அஜீத்துக்கு பாசமலர்கள் ரிலீஸ். இதுல கமல் படம் வெள்ளி விழா. 2 தேசிய விருதுகள் பெற்றது. அடுத்து கமலுக்கு வந்தது மகளிர் மட்டும். இதுவும் வெள்ளி விழா. இதில் கமல் தான் வின்னர்.

Indian

Indian

1995ல் அஜீத்துக்கு ஆசை, கமலுக்கு குருதிப்புனல் ரிலீஸ். இதுல ரெண்டுமே வெற்றி தான் என்றாலும் அஜீத் தான் வின்னர். 1996ல் கமலுக்கு இந்தியன் படமும், அஜீத்துக்கு காதல் கோட்டை, மைனர் மாப்பிள்ளை ரிலீஸ். இதுல இந்தியன், காதல் கோட்டை வெற்றி. 1998ல் கமலுக்கு காதலா காதலா, அஜீத்துக்கு காதல் மன்னன், அவள் வருவாளா படங்கள் ரிலீஸ். இதுல 3 படங்களும் வெற்றி. இருந்தாலும் அஜீத்தின் காதல் மன்னன் தான் வின்னர்.

2000த்தில் கமலுக்கு ஹேராம், அஜீத்துக்கு முகவரி ரிலீஸ். இதுல கமல் படம் பிளாப். அதனால் அஜீத் தான் வின்னர். 2001ல் அஜீத்துக்கு அசோகா, கமலுக்கு ஆளவந்தான் ரிலீஸ். இதுல ரெண்டும் பிளாப். அதே ஆண்டில் கமல் கெஸ்ட் ரோலில் நடித்த பார்த்தாலே பரவசம் படமும் பிளாப்.

Varalaru

Varalaru

2002ல் கமல் நடித்த பம்மல் கே.சம்பந்தம், அஜீத்துக்கு ரெட் படங்கள் ரிலீஸ். இதுல கமல் தான் வின்னர். அதே ஆண்டில் கமலுக்கு பஞ் தந்திரம். அஜீத் நடித்த ராஜா படம் சுமாராகத் தான் ஓடியது. அதனால் கமல் தான் வின்னர். 2003ல் கமலுக்கு அன்பே சிவம், அஜீத்துக்கு என்னைத் தாலாட்ட வருவாளா படமும் ரிலீஸ். இதுல ரெண்டுமே பிளாப். 2005ல் கமலுக்கு மும்பை எக்ஸ்பிரஸ், அஜீத்துக்கு ஜி படமும் ரிலீஸ். இதுல ரெண்டுமே பிளாப்.

2006ல் கமலுக்கு வேட்டையாடு விளையாடு படமும், அஜீத்துக்கு வரலாறு படமும் ரிலீஸ். இதுல ரெண்டுமே வெற்றி. என்றாலும் அஜீத் தான் வின்னர். 2015ல் அஜீத்துக்கு வேதாளம், கமலுக்கு தூங்காவனம் ரிலீஸ். இதுல அஜீத்தான் வின்னர்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top