ஆயிரம் பேருக்கு அஜித் செய்த உதவி! எல்லாரும் ஏமாத்திட்டாங்க.. ஓ அதான் இப்படி இருக்காரோ

Published on: April 7, 2024
ajith
---Advertisement---

Actor Ajith: மயிலாப்பூரில் டூ வீலர் மெக்கானிக்காக இருந்து இயக்குனர் செல்வாவால் சினிமாவில் அறிமுகமாகி இன்று ஒரு மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் நடிகர் அஜித்.ஆரம்பத்தில் இருந்தே பைக், கார் மீது அலாதி பிரியம் கொண்ட அஜித் ரேஸில் ஆர்வம் அதிகம் கொண்டவராக இருந்திருக்கிறார். அந்த ஆசை இன்னும் விட்டபாடில்லை. இந்திய அளவில் பைக் பயணம் அதன் பின் உலக அளவில் பைக் பயணம் என தன் லட்சியத்தை அடைய முயற்சித்து வருகிறார்.

நடிகர்களிலேயே கொஞ்சம் வித்தியாசமானவராகவும் இருக்கிறார் அஜித். அதுவும் சமீபகாலமாக அஜித்தை பற்றி வரும் விமர்சனங்கள் பெரும் அதிருப்திக்குள்ளாக்குகிறது. ஆனால் அஜித்தை பற்றி பிரபல காமெடி நடிகர் பாவா லட்சுமணன் சில விஷயங்களை பகிர்ந்தார். அஜித் உண்மையிலேயெ மிகவும் தங்கமான மனுஷன் என பாவா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க: 12 முறை விஜயுடன் மோதிய சிம்பு படங்கள்!… ஜெயிச்சது யாரு?.. தளபதியா? லிட்டில் சூப்பர்ஸ்டாரா?..

விஜயகாந்திற்கு அடுத்து அஜித்தை சொல்லலாம். பல நடிகர்கள் பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில் அஜித் ஒரு ஆயிரம் பேருக்கு இதய சிகிச்சை செய்து கொடுத்திருக்கிறார். அதுவும் அவர் சொல்கிற மருத்துவமனைக்கு சென்றால்தான் பண உதவி செய்வாராம். ஆனால் பணத்தை கையில் கொடுக்க மாட்டாராம்.

சிகிச்சை முடிந்து அவர்களுக்கான மூன்று மாத செலவுகளுக்கு அந்த பணத்தையும் அவர்களது வங்கியில் போட்டு விடுவாராம். எந்த காரணத்தைக் கொண்டும் சம்பந்தப்பட்ட்வர்களின் கையில் கொடுக்கமாட்டாராம். ஏனெனில் அப்படி பல பேர் இதய மாற்று சிகிச்சை என சொல்லி பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு சிகிச்சை செய்யாமல் ஏமாற்றிவிட்டார்கள்.

இதையும் படிங்க: ப்பா! பேய் மாதிரி இருக்கு!.. ஓவர் மேக்கப்பில் நயன்தாரா.. புது லுக்கை பார்த்து பயந்து போன ஃபேன்ஸ்!..

நீ வருவாய் என படத்தில் மேனேஜராக இருந்தவர் பாவா லட்சுமணன். படத்தின் படப்பிடிப்பு நாகர்கோயிலில் நடைபெற்ற போது அஜித்துக்கு மட்டும் தனியாக கெஸ்ட் ஹவுஸ் ஏற்பாடு செய்து கொடுத்தார்களாம். மற்றவர்கள் எல்லாரும் ஒரு ஹோட்டலில் தங்கிவிட்டார்களாம். அன்று இரவே அஜித் தனது உடமைகளை எல்லாம் தூக்கிக் கொண்டு இவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கே வந்து விட்டாராம்.

எனக்கு மட்டும் என்ன கெஸ்ட் ஹவுஸ்? உங்களுடனேயே இருந்து விடுகிறேன் என சரி சமமாக பார்த்தாராம். விஜயகாந்துக்கு பிறகு அஜித்தான் சகஜமாக தோள் மேல் கை போட்டு பேசுவார் என்றும் பாவா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் போலவே பெரிய மனசு!.. தம்பிக்கு சொகுசு காரை பரிசாக வழங்கிய விஜய பிரபாகரன்.. இத்தனை கோடியா?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.