சரியான பேராசை புடிச்ச சுயநலவாதி வடிவேலு!.. கூட இருக்குறவங்களுக்கு சம்பளமா இதைத்தான் தருவாரா?..

Published on: April 7, 2024
---Advertisement---

சின்னக் கவுண்டர் படத்துல விஜயகாந்துக்கு குடை பிடித்துக் கொண்டு வரும் சின்ன கேரக்டரில் நடிச்ச வடிவேலுவுக்கு விஜயகாந்த் தவசி, எங்கள் அண்ணா உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடிக்கும் வாய்ப்பையே வழங்கினார்.

ஆனால், பின்னாளில் விஜயகாந்த் என்றும் பாராமல் வடிவேலு அவருடன் பார்க்கிங் பிரச்சனைக்காக எல்லாம் சண்டை போட்டிருக்கிறார் எனக் கூறுகின்றனர். விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் கூட தெரிவிக்காத வடிவேலு, விஜயகாந்த் சமாதியை கூட இதுவரை வந்து பார்க்கவில்லை.

இதையும் படிங்க: 12 முறை விஜயுடன் மோதிய சிம்பு படங்கள்!… ஜெயிச்சது யாரு?.. தளபதியா? லிட்டில் சூப்பர்ஸ்டாரா?..

கலைஞர் கருணாநிதி நினைவிட திறப்பு விழாவுக்கு வடிவேலு வந்து சென்ற போது அதுதொடர்பான கடும் விமர்சனங்கள் வெடித்தன. ஆனால், அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் விஜயகாந்த் மீதான தீரா கோபத்தை இன்றளவும் காட்டி வரும் வடிவேலு தன்னுடன் நடிப்பவர்களுக்கு சரியாக சம்பளமே கொடுக்க மாட்டார் என சினிமா பிரபலம் சபதா ஜோசப் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

கவுண்டமணி காமெடியனாக உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அதிகபட்சமாக 2 இலட்சம் வரை சம்பளமாக வாங்கி வந்தார். வடிவேலு அந்த இடத்துக்கு வந்த பின்னர் ஒரு நாளைக்கு 10 லட்சம் வரை வாங்க ஆரம்பித்து விட்டார்.

இதையும் படிங்க: ப்பா! பேய் மாதிரி இருக்கு!.. ஓவர் மேக்கப்பில் நயன்தாரா.. புது லுக்கை பார்த்து பயந்து போன ஃபேன்ஸ்!..

ஆனால் அவருடன் நடிப்பவர்களுக்கு ரொம்பவே கம்மியாக தான் சம்பளம் கொடுப்பார். 500 ரூபாயை தாண்டி யாருக்கும் ஒரு நாளைக்கு சம்பளத்தை வடிவேலு கொடுக்க மாட்டார் என அதிர்ச்சி தகவல்களை அவர் கூறியுள்ளார்.

வடிவேலு தனது டீமில் பல திறமையான காமெடியன்களை உருவாக்கி வைத்திருந்தார். அவரது காமெடி போர்ஷன் எல்லாம் பெரும்பாலும் அவரே தான் டைரக்ட் செய்து விடுவார். தம்பி ராமையா, முத்துக்காளை, போண்டா மணி உள்ளிட்ட பலர் வடிவேலு டீமில் இருந்தவர்கள் தான்.

இதையும் படிங்க: விஜயகாந்த் போலவே பெரிய மனசு!.. தம்பிக்கு சொகுசு காரை பரிசாக வழங்கிய விஜய பிரபாகரன்.. இத்தனை கோடியா?

போண்டா மணி உடல்நலக்குறைவாக உயிரிழந்த நிலையில், அதற்கு முன்னதாக சிகிச்சைக்கு கூட வடிவேலு ஒரு ரூபாய் கூட தரவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. தான் மட்டுமே அதிகம் சம்பாதித்து சொத்துக்களை சேர்க்க வேண்டும் என நினைத்த வடிவேலு தன்னுடன் இருப்பவர்களை வசதியாக வாழ வைக்க வேண்டும் என கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை என பலரும் கூறி வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.