கும்மிருவேன் கும்மி!.. அடிக்க பாய்ந்த சரண்யா… என்னம்மா இப்படி பண்றீங்களே – பதறிய பயில்வான்…

Published on: April 7, 2024
saranya bayilvan
---Advertisement---

எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துக்குவான் அப்படீன்னு  “ஆவாரம் பூ” பட நகைச்சுவை காட்சி மூலமா தமிழ்சினிமாவில்  பிரபலமானவர் ‘பயில்வான்’ ரெங்கநாதன்.  இதனிடையே நான் யாரு தெரியுமா? அப்படின்னு ஒரு காலத்தில முன்னணி ஹீரோக்களை மிரட்டுறே வேடத்திலேயும் நடிச்சவர்.  கொடூர வில்லனா ஆகிடலாம்னு நெனச்ச இவரு, இப்போ யூ -டியுப்  சேனல் நடத்தி,  அதன் மூலமா மக்களை சந்திச்சிட்டு இருக்காரு.

பொதுவா இவரு ஒரு செய்தியை மக்களுக்கு இவரோட யூ – டியூப் சேனல் மூலமா சொல்லுறாரு அப்டின்னாலே ரசிகர்கள் முன்டி அடிச்சிட்டு அதை  பார்ப்பாங்க.  ஏன்னா அதுல இருக்குற “கண்டன்ட்” அப்படி,  அது மட்டுமல்லாமல் இவர் கொடுக்கிற வர்ணனையும்,  இதனால் பல பிரச்சனைகளை சந்தச்சி வந்தாலும்,  இவர் அதை எல்லாம் பத்தி கவலைப்படமாட்டாரு.

bayilvaan
bayilvaan

“நாயகன்” படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில்  பிரபலம் அடைந்த  சரண்யா,  இப்ப அம்மா கேரக்டர்ல பின்னிக்கிட்டு இருக்காங்க.  “மனோரமா”, ” கோவை சரளா”  இவங்களுக்கு அப்பறமா  தமிழ் சினிமால அந்த இடம் காலியான மாதிரி இருந்தது,  அத இப்ப இவங்க வந்து அதனை நிரப்பிக்கிட்டாங்க.

ponvannan
ponvannan

இப்படி குடும்ப குத்துவிளக்கா  தமிழ் சினிமா திரையில தோன்றி வர்ற சரண்யா சமீபத்தில போலீஸ் ஸ்டேஷன் வர போயிருக்காங்களாம். பக்கத்து வீட்டுக்காரங்க கூட நடந்த ஒரு பிரச்சனையில. கதவை இழு த்து மூடுறதில  வந்த ஒரு சின்ன பிரச்சனையில் இவங்க ஒத்தையாளா போய்  சும்மா கும்மாங்குத்து குத்திட்டு வந்திருக்காங்க பக்கத்து வீட்டு ‘அக்கா’வை.

என்ன தான் இருந்தாலும் சினிமாக்காரங்கள்ல இவங்களுக்கு பழக்க, வழக்கம் அதிகமா இருக்கும்ன்னு புரிஞ்சிக்கிட்ட அந்த ‘அக்கா’ நேரா போலீஸ் ஸ்டேஷன்ல போய் கொலை முயற்சின்னு கம்பளைண்ட் கொடுத்ததா ‘பயில்வான்’ ரெங்கநாதன் சொல்லிருக்காரு. அதோட மட்டும் இல்லாமல் ‘சினிமால நல்லவங்களா நடிக்கிறவங்களாம் நிஜத்துல நல்லவங்க கிடையாது, சினிமால வில்லனா தெரியிறவங்க எல்லாம் நிஜத்துல வில்லைன்கள் கிடையாது’ அப்படீன்னு ஒரு பஞ்ச் வேற சொல்லிருக்காரு.