Connect with us
Vijay

Cinema History

விஜயின் அடுத்த படத்துக்கு 250 கோடியா? உசுப்பி விடுறது யாரு?.. அரசியலுக்கு முட்டுக்கட்டையா..?

ஒரு நடிகர் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போது அரசியலில் களம் இறங்குகிறார் என்றால் அது பெரிய விஷயம். அந்த வகையில் விஜய் பாராட்டுதலுக்கு உரியவர் தான். ஆனால் கோட் படத்திற்குப் பிறகு ஒரு படத்தில் நடித்து விட்டுத் தான் அரசியலில் இறங்க உள்ளாராம். இந்தப் படத்திற்கு 250 கோடி என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது உண்மையான தகவலா என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.

இதையும் படிங்க… உனக்கெல்லாம் நடிப்பே வராது.. என்னத்த படிச்சி கிழிச்ச!.. ரஜினியை திட்டிய இயக்குனர்…

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் விஜயாகத் தான் இருப்பார் என்றும் அந்தப் பெயரோடு தான் சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்றும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது என தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் சித்ரா லெட்சுமணன் கேட்கிறார். அதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் சொல்லும் பதில் இதுதான்.

விஜயைப் பொருத்தவரை கோட் படத்திற்கே 200 கோடி வாங்குகிறார். அதனால் 220 ஆக இருந்தாலும் வேறு யாருக்கும் தெரியப்போவதில்லை. பெரிய நம்பர்களில் சொன்னால் தான் அது ஒரு ஹெட்லைன் நியூஸா வரும்.

அதனால 250 கோடின்னு சொல்றாங்க. இது எல்லாமே ஊடகங்களின் யூகங்கள் அடிப்படையில் வருகின்றன. இவ்வளவு பெரிய தொகையை தயாரிப்பு தரப்பு கொடுப்பதானால் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். அது விஜய்க்கு கிடைக்கிற அங்கீகாரமாகவே இதைப் பார்க்க வேண்டும்.

GOAT

GOAT

ஆனா இவர் தான் அடுத்த தயாரிப்பாளர்னும் சொல்லலை. விஜயும் உறுதிப்படுத்தவில்லை. இயக்குனர் யாருன்னே தெரியாது. ஆனா இந்த வதந்திகள் வேகமாகப் பரவுகிறது. விஜய் என்ன நினைப்பார்னா, என்னடா இவங்களே சம்பளத்தைக் கூட்டி கூட்டி நம்மை டார்ச்சர் பண்றாங்கன்னு நினைப்பாரு. இதெல்லாம் டாக்ஸ் பிரச்சனையில் அவருக்குத் தான் சங்கடத்தை ஏற்படுத்தும்.

ஆனா அவர் இதெல்லாம் கடந்து போய்க்கிட்டு இருக்காரு. இது போன்று சம்பளத்தைப் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்தி விட்டு ஊடகங்கள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக சொன்னால் எல்லாருக்குமே நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கோட் படத்தைப் பொறுத்தவரை ஏப்ரல் இறுதிக்குள் படப்பிடிப்பு முடிவடையும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலில் களம் காண உள்ள நிலையில் விஜய்க்கு இவ்வளவு அதிகமான சம்பளம் கொடுக்கப்போவதாக சொல்வது அவரது அரசியலுக்கு முட்டுக்கட்டை போடுமா என்றும் எண்ணத் தோன்றுகிறது.

google news
Continue Reading

More in Cinema History

To Top