என்னது மகள் முறையா? சர்ச்சைக்குள்ளான வேல ராமமூர்த்தியின் திருமணம்.. பின்னனியில் நடந்த சம்பவம் இதோ

Published on: April 8, 2024
vela
---Advertisement---

Actor Vela Ramamoorthy: எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி ‘குற்றப்பரம்பரை’, ‘பட்டத்துயானை’ என்ற புகழ்பெற்ற நாவலை எழுதியவர். இவர் எழுதிய குற்றப்பரம்பரை நாவலை அடிப்படையாக கொண்டுதான் படம் எடுக்க ஏகப்பட்ட இயக்குனர்கள் வரிசை கட்டிக் கொண்டிருக்கின்றனர். பாரதிராஜா, பாலா என எப்படியாவது இந்த நாவலை எடுக்க வேண்டும் என திட்டமிட்டு தோல்வியை தழுவினர்.

கடைசியாக சசிகுமார் எடுக்கப் போவதாகவும் அதில் சண்முக பாண்டியன் நடிக்க இருப்பதாகவும் ஒரு செய்தி பரவிக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு கம்பீரமாகவும் திமிருத்தனமான பேச்சாலும் அனைவரையும் கவர்ந்த வேல ராமமூர்த்தி மத யானை கூட்டம் என்ற படத்தில் வில்லனாக அறிமுகமானார். .அதனை தொடர்ந்து கொம்பன் , கிடாரி , சேதுபதி போன்ற படங்களிலும் வில்லனாகவே நடித்தார்.

இதையும் படிங்க: கூட்டிக் கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்! சம்பளத்தை உயர்த்த இப்படி ஒரு ஸ்கெட்சா? சூர்யா கையாளும் யுத்தி

தற்போது சன் டிவியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் எதிர் நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக நடித்து வருகிறார் வேல ராமமூர்த்தி. இதற்கு முன் மாரிமுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாரடைப்பால் மாரிமுத்து காலமானார். அதன் பிறகே வேல ராமமூர்த்தி இந்த தொடரில் எண்ட்ரி ஆனார்.

இந்த நிலையில் வேல ராமமூர்த்தி மேடையில் பேச்சு ஒரு கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதாவது எனக்கு மகள் முறையில் வரும் பெண்ணத்தான் நான் திருமணம் செய்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். அது சமூக வலைதளங்களி பெரும் வைரலானது. ஒரு எழுத்தாளர். இவரே இப்படி செய்யலாமா என்று பல பேர் விமர்சித்து வந்தார்கள்.

இதையும் படிங்க: சின்ன வயசுலயே டீச்சர்கிட்ட இப்படி ஒரு கேள்வியா? தலைமுடியை வெட்ட சொன்னதுக்கு சிம்பு சொன்னது என்ன தெரியுமா

இந்த நிலையில் அதற்கான காரணத்தையும் வேல ராமமூர்த்தியும் கூறியிருக்கிறார். அதாவது அத்தை பெண் ஒருத்தி தன்னை விட வயது மூப்பாக இருக்கும் பட்சத்தில் அவருடைய பெண்ணை தென் மாவட்ட வழக்கப்படி திருமணம் செய்வார்களாம். அதாவது அத்தை பெண் மதினி முறை வேண்டும். அந்த மதினியின் மகளை திருமணம் செய்யும் வழக்கம் தென் மாவட்டத்தில் இருக்கிறதாம். அதன் படிதான் வேல ராமமூர்த்தியும் மதினி மகளை திருமணம் செய்திருக்கிறாராம்.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.