Cinema History
கமல் நடித்த வெள்ளி விழா படங்களின் லிஸ்ட்!.. வசூல் ராஜாவாக கலக்கிய உலக நாயகன்…
குழந்தை பருவத்திலேயே தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர், தற்பொழுது உள்ள நடிகர்களில் அதிக அனுபவம் பெற்றவர் என இவரை குறிப்பிட்டு சொல்லலாம். நடிப்பதில் மட்டுமல்லாமல், சினிமாவில் பல்வேறு துறைகளில் கில்லாடியாக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன்.
இவருடன் சில படங்களில் நடித்த ரஜினி தனக்கென ஒரு பெயரை ரசிகர்களிடம் சம்பாதித்தார். ‘நாம் இருவரும் இணைந்து நடித்தால் அது உங்களது எதிர்காலத்திற்கு பலம் சேர்ப்பதாக இருக்காது’ என அன்போடு ரஜினிக்கு அறிவுரை கூறிய கமல்ஹாசன், ரஜினியை தனியாக நடிக்க வைத்தார்.
இன்று நான் திரைத்துறையில் மிகப்பெரிய பெயரை பெற்றிருப்பதற்கு முக்கியமாக காரணமாக அமைந்தவர் கமல் என ரஜினிகாந்த் பெருமையாக சொல்வதோடு அவர்களது நட்பை பற்றி சிலாகித்துள்ளார்.
“களத்தூர் கண்ணம்மாவில்” துவங்கி “இந்தியன் 2 ” வரை தமிழ் மொழியில் மட்டுமல்ல, இந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்து முத்திரை பதித்துள்ளார். வசூல்ரீதியாக மட்டும் தனது படத்தை ரசிகர்களிடம் எடுத்துச் செல்லாமல் புதுமைகளைப் புகுத்தி புதிய புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதில் இவருக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
இவர் படங்களில் ஏதாவது ஒரு விதத்தில் தமிழக ரசிகர்களுக்கு தெரிந்திருக்கப்படாத ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பார். இப்படி சினிமாவிற்காக தனது வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்த கமல்ஹாசனின் வெள்ளிவிழா கண்ட படங்களில் இவை சில…
“பதினாறு வயதினிலே”, “சிகப்பு ரோஜாக்கள்”. “குரு”, “வாழ்வே மாயம்”, “மீண்டும் கோகிலா”, “மூன்றாம் பிறை” இந்த படங்கள் அனைத்திலும் கமலுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருப்பார்.
“சகலகலா வல்லவன்”, “தூங்காதே தம்பி தூங்காதே”, “ஒரு கைதியின் டைரி” என இவர் தொட்டதெல்லாம் ஹிட்டாக அமைந்தது. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த “நாயகன்” படம் இவரின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனை தந்த படம்.
இரட்டை வேட நடிப்பில் வித்தியாசம் காட்டிய கமலின் “அபூர்வ சகோதாரர்கள்”, “மைக்கேல் மதன காமராஜன்” , நடிகர் திலகம் சிவாஜியுடன் இவர் நடித்த “தேவர் மகன் படம்” அதனைத்தொடர்ந்து “இந்தியன்”, “அவ்வை சண்முகி”, “தெனாலி” என அனைத்துமே வெள்ளிவிழா கண்டவையே.