Connect with us
vijayakanth

Cinema News

விஜயகாந்த் இல்லாமலும் ஹிட்டு கொடுப்பேன்!.. சரித்திர சாதனையை நிகழ்த்திய இணைந்த கைகள்!..

தமிழ் சினிமாவில் பல புதிய, சிறப்பான விஷயங்களுக்கு சில படங்கள் தொடக்கமாக அமையும். அப்படிப்பட்ட ஒரு படம்தான் இணைந்த கைகள். அருண் பாண்டியன், ராம்கி, நிரோஷா, ஸ்ரீவித்யா, நாசர், செந்தில் என பலரும் நடித்து 1990ம் வருடம் வெளிவந்த திரைப்படம் இது.

இப்போதுதான் ஷங்கர், ராஜமவுலி போன்றவர்கள் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக திரைப்படங்களை எடுக்கிறார்கள். ஆனால், இந்த பிரம்மாண்டத்திற்கு விதை போட்டவர் தயாரிப்பாளர் ஆபாவணன். இணைந்த கைகள் படத்திற்கு முன் ஊமை விழிகள், செந்தூரப்பூவே, உழவன் மகன் ஆகிய படங்களை தயாரித்திருந்தார். இணைந்த கைகள் படத்திலும் விஜயகாந்த் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் விஜயகாந்த் நடிக்கவில்லை.

இதையும் படிங்க: வாரிசு நடிகையுடன் ஜல்சா செய்த தனுஷ்… விவகாரத்து பிறகு உடனே திருமணம்… உண்மையை உடைத்த பிரபலம்!

எனவே, விஜயகாந்த் இல்லாமல் ஆபாவணன் ஹிட் கொடுக்க முடியாது என பலரும் பேசினார்கள். அதனால், கண்டிப்பாக இப்படத்தை வெற்றிப்படமாக கொடுப்பேன் என சபதம் போட்டார் ஆபாவாணன். அருண்பாண்டியன் மற்றும் ராம்கியை வைத்து படத்தை தயாரித்தார். ஹாலிவுட் பாணியில் இப்படத்தின் கதை, திரைக்கதை அமைக்கப்பட்டது.

அதிலும், ராம்கியும், அருண்பாண்டியனும் சந்திக்கும் அந்த இடைவேளை காட்சிகள் ரசிகர்களுக்கு கூசும்ப்ஸ் ஃபீலிங்கை கொடுத்தது. தமிழ் சினிமாவில் இடம் பெற்ற சிறந்த இடைவேளை காட்சிகளில் முக்கியமானதாக அந்த காட்சி இன்றும் இருக்கிறது. பாடல்களும் சிறப்பாக அமைந்தது.

inaintha kaigal

இப்படத்திற்காக சென்னை அண்ணாசாலையில் பெரிய பேனர் வைக்கப்பட்டது. தினசரி நாளிதழ்களில் தினமும் விளம்பரம் செய்யப்பட்டது. மும்பையில் இப்படம் வெளியான ஒரு தியேட்டரில் ரசிகர்களுக்குள் அடிதடி நடந்து தியேட்டரே சூறையாடப்பட்டது. அதோடு, முதன் முதலாக கனடா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் வெளியான தமிழ் படமாக இணைந்த கைகள் சாதனை படைத்தது.

இதையும் படிங்க: விஜய் மகனுக்கும் அஜித்துக்கும் உள்ள ஒரே ஒற்றுமை! ஷாக் கொடுத்த ஷாலினி அஜித்

இந்த படத்தின் பல காட்சிகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. குறிப்பாக அப்படத்தின் இறுதிக்காட்சியில் ரயில்வே நிலையத்தில் இடம் பெறும் சண்டைக் காட்சி அசத்தலாக அமைந்தது. இந்த படம் ராம்கி மற்றும் அருண்பாண்டியனுக்கு நிறைய பட வாய்ப்புகளை பெற்று கொடுத்தது.

ஆனால், இந்த படம் பெரிய வெற்றிப்படம் இல்லை என சிலர் கிளப்பிவிட்டனர். ஆனால், அதில் உண்மை இல்லை என மறுத்திருக்கிறார் ஆபாவாணன். இதுவரை வந்த சிறந்த ஆக்‌ஷன் படங்களின் முக்கிய இடத்தில் இணைந்த கைகள் இப்போதும் இருக்கிறது. எப்போதும் இருக்கும்.

Continue Reading

More in Cinema News

To Top