Cinema News
ஒரே ராத்திரியில் நடந்த சம்பவம்!.. விஜய் சும்மா ஓடிக்கிட்டே இருப்பாரு!.. பெப்ஸி விஜயன் பேட்டி!..
பிரபல சண்டை பயிற்சி இயக்குனரான பெப்சி விஜயன் தளபதி விஜய்யின் போக்கிரி படத்துக்கு அமைத்த சண்டைக் காட்சிகள் குறித்து பேட்டி ஒன்றில் ஏகப்பட்ட விஷயங்களை பகிர்ந்துள்ளார். சுமார் 40 படங்களுக்கு ஒரே மாதிரியான ட்ரெயின் சண்டை காட்சிகளையே வைத்து வந்த நிலையில், இந்தப் படத்துக்கும் அதே தானே என தனது அசிஸ்டெண்ட்கள் சிலர் கேட்டனர்.
ஆமாம்ல, அப்படித்தானே பண்ணிட்டு இருக்கேன் என யோசித்து ஹீரோவுக்கான பில்டப் மற்றும் வெறித்தனமான யாருமே யோசித்துப் பார்க்க முடியாத அளவுக்கு சண்டைக் காட்சிகளை வைத்த நிலையில், அந்தப் படத்துக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் கிடைத்தன. ஒரே இரவில் அந்த சண்டைக் காட்சியை எடுத்து முடித்தோம். ஒரு செகண்ட் கூட விஜய் ரெஸ்ட் எடுக்காமல் மொத்த ஆக்ஷன் காட்சிகளையும் நடித்து முடித்தார். அப்போதே இந்த படம் பிளாக்பஸ்டர் படம் என சொல்லி விட்டேன் என்றார்.
இதையும் படிங்க: அந்த க்ரூப் எடுக்கிறதெல்லாம் படமே இல்லை!.. நாங்க எடுக்கிற படங்கள் தான் மாஸ்.. பா. ரஞ்சித் பேச்சு!..
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மீண்டும் கோகிலா படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குனராக அறிமுகமானவர்தான் பெப்சி விஜயன். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏகப்பட்ட படங்களுக்கு சண்டைக் காட்சிகள் அமைத்து பிரபல ஸ்டண்ட் மாஸ்டராக மாறியவர் பெப்சி விஜயன்.
ஸ்டண்ட் இயக்குனராக மட்டுமில்லாமல் சினிமாவில் வில்லன் நடிகராகவும் நடிக்க ஆரம்பித்தார். சிரஞ்சீவி நடித்த மந்திரி காரி வியன்குடு படத்தில் நடிக்க ஆரம்பித்த பெப்சி விஜயன் தமிழில் சியான் விக்ரம் நடித்து வெளியான தில் படத்தில் நடிகராக அறிமுகமானார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாபா, அஜித் நடிப்பில் வெளியான வில்லன் மற்றும் ஆஞ்சநேயா போன்ற பல படங்களில் வில்லனாகவும் இவர் மிரட்டியுள்ளார்.
இதையும் படிங்க: இரத்தம் பீறிட்டு வருது! அஜித் முடியவே முடியாதுனுட்டாரு.. பெப்சி விஜயன் சொன்ன சுவாரஸ்ய தகவல்
சந்தானம் நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் இவர் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கடந்த ஆண்டு வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தார். போக்கிரி படத்துக்காக பல விருதுகளை பெற்ற பெப்சி விஜயன் அந்த படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார் என்பதையும் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
கிளைமாக்ஸ் காட்சியில் சுடுகாட்டில் இருந்து விஜய் கிளம்பியதும் ஓடிக்கொண்டே இருப்பார் ஒரு இடத்திலும் நிற்கவே மாட்டார் ஈசியாக பிரகாஷ் ராஜை அளிக்கும் வரை அவர் நின்றபடி ஒரு ஷாட் கூட இருக்காது அந்த அளவுக்கு பரபரப்பாக வேலை பார்த்திருப்பார். ஸ்டண்ட் நடிகர்களுக்கு ரயிலில் போய் முட்ட சொன்னால் முட்டுவார்கள். ஏன்? எதற்கு? நமக்கு என்ன ஆகும் என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள். ஒவ்வொரு படத்தின் ஃபைட் சீன்களையும் எடுக்கும் போது பலர் தங்கள் உயிரை பணயம் வைத்துதான் நடித்து வருகின்றனர் என உருக்கமாகவும் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: விக்னேஷ் சிவன் படம் ஓவரா!.. அடுத்த படத்தில் ஹீரோவான பிரதீப் ரங்கநாதன்!.. இயக்குநர் யாரு தெரியுமா?..