கனகா இப்படி ஆனதற்கு காரணம் அவரது அம்மாதானா? இது புதுசால இருக்கு.. இயக்குனர் சொன்ன சீக்ரெட்

Published on: April 11, 2024
kanaga
---Advertisement---

Actress Kanaga: தமிழ் சினிமாவில் எத்தனையோ பல முன்னணி நடிகைகளை நாம் கடந்து வந்தாலும் இந்த நடிகைக்கு என இப்ப வரைக்கும் ஒரு தனி க்ரேஸ் இருக்கத்தான் செய்கிறது. அவர்தான் நடிகை கனகா. கரகாட்டக்காரன் படத்தில் கனகாவை ரசிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. அதுவும் இவருடைய கண்ணுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

தமிழ் , தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு தனி அந்தஸ்தை பெற்ற கனகா கிட்டத்தட்ட 30 வருடமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியே வாழ்ந்து வருகிறார். தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு யாரையும் பார்க்க பிடிக்காமல் அவருடைய வீட்டில் வாழ்ந்து வருகிறார். கனகாவை பற்றி ஏகப்பட்ட வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.

இதையும் படிங்க: ஒரே ராத்திரியில் நடந்த சம்பவம்!.. விஜய் சும்மா ஓடிக்கிட்டே இருப்பாரு!.. பெப்ஸி விஜயன் பேட்டி!..

உதவியாளரின் காதலை தவறாக புரிந்து கொண்டு அவரை விரட்டியடித்த சம்பவம். பின் அந்த உதவியாளரின் மறைவிற்கு பிறகுதான் அவர் தன்னை காதலித்தார் என்று கனகாவுக்கு தெரிய வர அதுவே அவரை பெரிய மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. அதன் பின் அவருடைய அப்பாவின் சொத்துப்பிரச்சினை என கனகாவை சுற்றி பிரச்சினைகளே வட்டமடித்துக் கொண்டிருந்தது.

ஒரு காலத்தில் ஓஹோனு வாழ்ந்த நடிகை. இப்போது யாராலும் பார்க்க முடியாத அளவு தனிமைப்படுத்திக் கொண்டாரே என ரசிகர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பிரபல் இயக்குனர் வி.சேகர் அவர் எடுத்த  ‘விரலுக்கேத்த வீக்கம்’ படத்திற்காக விவேக்குக்கு ஜோடியாக கனகாவை ஒப்பந்தம் செய்ய அவரது வீட்டிற்கு சென்றாராம். அப்போது தேவிகாதான் அவருடைய கால்ஷீட்டை பார்த்துக் கொண்டிருந்தாராம்.

இதையும் படிங்க: ‘படையப்பா’வில் நீலாம்பரி கேரக்டரால் கடுப்பான ரசிகர்! இவ்ளோ பிரச்சினைகளை சந்தித்தாரா ரம்யா கிருஷ்ணன்

தேவிகா முதலில் தயங்கினாராம். சேகர்தான் என்னை நம்பி அனுப்பி வையுங்கள். கதை நல்ல கதை என்று சொல்லி கனகாவை நடிக்க வைத்திருக்கிறார். விவேக்தான் தனக்கு ஜோடி கனகாவா? என்று குஜாலாகிவிட்டதாக வி .சேகர் கூறினார். மேலும் கனகாவின் அம்மா தேவிகா ஒரு புரட்சியாளர். அதனால்தான் ஒரு சாதாரண கூலி வேலை செய்தவரை திருமணம் செய்தார். இதுவே கனகா இப்படி ஆனதற்கு காரணம் என வி.சேகர் கூறினார்.

இதிலிருந்து அவரது அப்பா மூலமாக ஏதாவது பிரச்சினைகள் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. தனக்கு என்ன ஆனது? தான் ஏன் இப்படி இருக்கிறேன் ?  என்று கனகாவே வந்து சொன்னால்தான் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.

இதையும் படிங்க: அந்த க்ரூப் எடுக்கிறதெல்லாம் படமே இல்லை!.. நாங்க எடுக்கிற படங்கள் தான் மாஸ்.. பா. ரஞ்சித் பேச்சு!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.