Cinema News
விஜயின் அரசியல் எண்ட்ரி!. நச் கமெண்ட் கொடுத்த நவரச நாயகன் கார்த்திக்!…
நடிகர்கள் அரசியலுக்கு வருவது எம்.ஜி.ஆர் காலத்தில் துவங்கியது. அப்போது, எம்.ஜி.ஆர் மட்டுமல்ல எஸ்.எஸ்.ஆர், சிவாஜி உள்ளிட்ட சிலரும் அரசியலுக்கு வந்தார்கள். இதில், எம்.ஜி.ஆர் மட்டுமே முதலமைச்சர் ஆனால், எம்.ஜி.ஆர் முதல்வரானதும் அவரை பின்பற்றி பலருக்கும் அந்த ஆசை வந்தது.
டி.ராஜேந்தர், பாக்கியராஜ், எஸ்.எஸ்.சந்திரன், வாகை சந்திரசேகர், ராமராஜன், நெப்போலியன், சரத்குமார், கார்த்திக், மன்சூர் அலிகான், விஜயகாந்த் என சினிமாவிலிருந்து அரசியலில் இறங்கி நடிகர், நடிகைகளின் பட்டியல் மிகவும் பெரியது. இந்த வரிசையில் விஜயகாந்த் மட்டுமே ஓரளவுக்கு வாக்குகளை பெற்று எதிர்கட்சி தலைவர் ஆனார். ராமராஜன் திருச்செந்தூர் தொகுதி எம்.பி.யாக இருந்தார்.
இதையும் படிங்க: கோட் படம் விஜய் படமா? செக் வைத்த டாப் ஸ்டார் பிரசாந்த்… அடிக்கடி இப்படியே சொல்றாரே!
மற்ற நடிகர்களெல்லாம் தங்களை சில கட்சிகளில் இணைத்துக்கொண்டனர். சரத்குமார் தனியாக கட்சி துவங்கினார். இப்போது மன்சூர் அலிகானும் கூட தனியாக கட்சி துவங்கி இருக்கிறார். சினிமாவில் இயக்குனராக இருந்த சீமானும் அரசியல் கட்சி துவங்கி ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். நடிகர் கமல்ஹாசனும் சில வருடங்களுக்கு முன்பு கட்சி துவங்கினார். ரஜினி அரசியலுக்கு வருவதாக பல வருடங்கள் போக்கு காட்டி பின் உடல்நிலையை காரணம் காட்டி ஜகா வாங்கி அவரின் ரசிகர்களை ஏமாற்றினார்.
இந்நிலையில்தான், ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜய் தனியாக கட்சி துவங்கியிருக்கிறார். கடந்த பல வருடங்களாகவே தனது மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் இதுபற்றி தொடர்ந்து ஆலோசனை செய்து வந்தார். நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அவரின் கட்சி போட்டியிடவில்லை என்றாலும் 2026 சட்டமன்ற தேர்தலை அவர் குறி வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: விஜய்க்கு வாழ்க்கை கொடுத்து காணாம போயிட்டாரு! இயக்குனர் விக்ரமனின் வெற்றியும் தோல்விகளும்!..
இந்நிலையில், விஜயின் அரசியல் எண்ட்ரி பற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த நடிகர் கார்த்திக் ’தம்பி விஜய் வரட்டும். அவரை போன்றவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது. அதுவும் பீக்கில் இருக்கும்போது அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ஒரு அண்ணனாக அவருக்கு நான் சொல்வது என்னவெனில் அரசியலுக்கு வந்தாலும் அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்தக்கூடாது.
ஏனெனில், திரையில் சொல்லப்படும் கருத்துக்கள் மக்களை சுலபமாக போய் சேரும். எனவே, அவர் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும். அவருக்கு என் வாழ்த்துக்கள்’ என சொல்லி இருக்கிறார்.