Connect with us
vijay vikraman

Cinema History

விஜய்க்கு வாழ்க்கை கொடுத்து காணாம போயிட்டாரு! இயக்குனர் விக்ரமனின் வெற்றியும் தோல்விகளும்!..

“புது வசந்தம்”என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இயக்குனர் விக்ரமன்.  குடும்பப்பாங்கான கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர்  இவர்.

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விஜய்க்கு  “பூவே உனக்காக” என்கின்ற  மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தவர்.  சினிமாவில்  எந்த திசையை நோக்கி செல்லலாம் என யோசித்துக் கொண்டிருந்த  விஜயை  காதல் காட்சிகளில் வலம் வரும்  நாயகனாக மாற்றியவர்களுள் முக்கியமானவர் இவர். தமிழகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் மட்டுமல்லாமல், அதிக நாட்கள் ஓடிய சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்த  மெகா ஹிட் படமான “சூரிய வம்சம்”.,   ஆக்சன் ஹீரோவாக வலம் வந்த விஜயகாந்த்  திடீரென குடும்பப்பாங்கான கேரக்டரை ஏற்று நடித்த “வானத்தைப்போல”.

ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்த “கோகுலம்”.  அஜித் குமார், கார்த்திக்,  ரோஜா நடித்த “உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்” ஆகிய படங்களை விக்ரம் இயக்கினார்.  எஸ்,ஏ.ராஜ்குமர், சிற்பி இவர்கள் இருவரை மட்டுமே அதிகமக தனது படங்களின் இசைக்கு பயன்படுத்தியிருப்பார்.

vikraman

vikraman

‘வெள்ளிவிழா’ படங்களை கொடுத்த இவரின் இயக்கத்தில் சுமாராக ஓடிய சில படங்களும் உண்டு.  இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை உணர்த்தி இவர் எடுத்த “புதிய மன்னர்கள்” படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.  ஆனந்த்பாபு, மோகினி நடித்த “நான் பேச நினைப்பதெல்லாம்”,  கேப்டன் விஜயகாந்தை நடித்த “மரியாதை” போன்ற படங்கள் இவருக்கு பெரிய அளவில் பெயரை பெற்று தரவில்லை.

சூர்யா,லைலா, சினேகா நடிப்பில் வெளிவந்து  எதிர்பார்த்த வெற்றியை பெற்றது “உன்னை நினைத்து”, மாதவன், ஜோதிகா நடிப்பில் வெளிவந்த “பிரியமான தோழி” வெகு நாட்களுக்கு பிறகு இவருக்கு வெற்றி படமாக  அமைந்தது

சென்டிமென்ட் கதைகளிலேயே கவனம் செலுத்தி படங்கள் எடுத்து வந்த விக்ரமன்,  தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்ற  கதைகளை  தயார் செய்து  கொண்டிருக்கலாம்.  “2கே”  மனநிலைக்கு ஏற்றவாறு கதைகள் தயார் செய்து, அதன்  பிறகு மீண்டும் வலம் வரலாம் என அவரது ரசிகர்கள் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

google news
Continue Reading

More in Cinema History

To Top