எங்க தளபதிக்கு விசில் போடுங்க.. ‘கோட்’ படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டது ஏஜிஎஸ்

Published on: April 11, 2024
vijay
---Advertisement---

GOAT Movie: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகிக் கொண்டு வரும் திரைப்படம் கோட். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. வரிசையாக இந்தியன் 2 மற்றும் வேட்டையன் பட ரிலீஸ் தேதி ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்க கோட் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது அறிவிப்பார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக இன்று ஏஜிஎஸ் நிறுவனம் கோட் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த வருடம் செப்டம்பர் 5 ஆம் தேதி கோட் படத்தின் ரிலீஸ் தேதி என ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 5 வியாழக்கிழமை வருவதால் வெள்ளி, சனி,ஞாயிறு என விடுமுறையை கருத்தில் கொண்டு ஒரு பக்கா கலெக்‌ஷனை மனதில் வைத்துதான் களமிறங்க உள்ளார்கள்.

இதையும் படிங்க: விஜயின் அரசியல் எண்ட்ரி!. நச் கமெண்ட் கொடுத்த நவரச நாயகன் கார்த்திக்!…

சும்மா வந்தாலே படத்தின் வசூல் பிச்சுக்கும். அந்தளவுக்கு விஜயின் மார்கெட் இன்றைய சினிமாவில் உச்சத்தில் இருக்கிறது. விஜய் படத்தை பொறுத்தவரைக்கும் கதையை யாரும் பார்ப்பதில்லை. படத்தில் ஆக்‌ஷன், மாஸ் என இவை இருந்தாலே படம் ஹிட்தான். அப்படித்தான் விஜயின் படங்கள் வியாபாரம் ஆகிக் கொண்டிருக்கின்றன.

என்ன இருந்தாலும் இந்த வருடம் ரசிகர்களுக்கு ஒரே சரவெடிக் கொண்டாட்டம் தான்.ஜூன் மாதம் இந்தியன் 2 திரைப்படம். அடுத்ததாக விஜயின் கோட் திரைப்படம். அக்டோபரில் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் என வரிசைக் கட்டிக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமும் போட்டி போட காத்துக் கொண்டிருக்கின்றன.

vijay
vijay

இதையும் படிங்க: இதை விட வேற இன்பம் கேட்குதா? தனுஷ் – ஐஸ்வர்யாவை பொளந்து கட்டும் கே.ராஜன்

ஆனால் விடாமுயற்சி படத்தை பொறுத்தவரைக்கும் இன்னும் 40 சதவீதம் படப்பிடிப்புகள் இருக்கும் நிலையில் அதை முழுவதுமாக முடித்து அதன் பின் போஸ்ட் ப்ரடக்‌ஷன் பணிகள் எல்லாம் இருக்கின்றது. அதனால் இந்த வருடம் இறுதியில் விடாமுயற்சி படத்தை எதிர்பார்க்கலாம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.