Cinema News
எதிர்ப்பை மீறி அந்த மாதிரி பொண்ணை நடிக்க வைத்த பாக்கியராஜ்!.. ரிசல்ட் என்னாச்சு தெரியுமா?..
Actor Bagyaraj: இந்திய சினிமாவிலேயே ஒரு பெஸ்ட் ஸ்கிரிப்ட் ரைட்டர் என்ற புகழைக் கொண்டவர் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ். அதுமட்டுமில்லாமல் ஒரு பன்முகத் திறமைகள் கொண்ட சிறந்த கலைஞராகவும் தமிழ் சினிமாவில் திகழ்ந்து வந்தார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர் என பன்முகத்திறமைகள் கொண்டு விளங்கிய பாக்யராஜ் கிட்டத்தட்ட 75 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.
25 படங்களை இயக்கியிருக்கிறார். ‘சுவரில்லாத சித்திரங்கள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாக்யராஜ் மௌன கீதங்கள் படத்தை இயக்கியதன் மூலம்தான் பிரபலமானார். அந்தப் படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்தார். அப்பா, அம்மா, சுட்டிக் குழந்தை என இந்த மூவரை சுற்றி அமையும் கதைதான் மௌன கீதங்கள். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க பலபேரை தேடிக் கொண்டிருந்தார் பாக்யராஜ்.
இதையும் படிங்க: 14 வருட சபதம்!.. அடிவாங்கியே ஆலமரமாக வளர்ந்த செந்தில்!.. யாருக்கும் தெரியாத மறுபக்கம்!..
இந்தப் படத்தின் போது பாக்யராஜும் ஒரு பிரபலமான கலைஞராக இருந்தார். நடிகை சரிதாவும் வளர்ந்து வரும் ஹீரோயின் ரேஞ்சில் இருந்தார். தப்பு தாளங்கள் படத்தில் ஒரு விலைமாது போல ஒரு கதாபாத்திரத்தில் சரிதா நடித்திருப்பார். அதை பார்த்த பிறகுதான் பாக்யராஜ் மௌன கீதங்கள் படத்தில் சரிதாவை ஒப்பந்தம் செய்தார்.
ஆனால் சுற்றி இருந்தவர்கள் அந்தப் படத்தில் விலைமகளாக நடித்த ஒரு நடிகை மௌன கீதங்கள் படத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் எப்படி நடிக்க முடியும்? அப்படி நடித்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்ததாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் மௌன கீதங்கள் படத்தில் சரிதாதான் சரியாக இருப்பார் என்று தைரியமாக பாக்யராஜ் நடிக்க வைத்தார்.
இதையும் படிங்க: எங்க தளபதிக்கு விசில் போடுங்க.. ‘கோட்’ படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டது ஏஜிஎஸ்
அவர் நினைத்தவாறே சரிதாவிற்கென்றே எழுதப்பட்ட கதாபாத்திரம் போல் அமைந்திருந்தது. பாக்யராஜ் இயக்கத்தில் முதல் வெள்ளிவிழா கண்ட படமாக மௌன கீதங்கள் திரைப்படம் அமைந்தது.