Cinema News
தலைவர் பன்ச்சை விட இதுதான் ஃபேமஸ்.. ஒரே ஒரு டையலாக்கால் ரஜினியை மடக்கிய நிழல்கள் ரவி
Actor Nizhalgal Ravi: தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு என்றே பிறந்தவர்கள் போல் ஒரு சில நடிகர்கள் இருப்பார்கள். அவர்கள் வரிசையில் சிறந்த குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் நிழல்கள் ரவி. பாரதிராஜாவால் ‘ நிழல்கள்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான நிழல்கள் ரவி அந்தப் படத்தில் இருந்தே தன் பெயருக்கு முன் நிழல்கள் என்ற அடைமொழியை வைத்துக் கொண்டார்.
அதுமட்டுமில்லாமல் தான் முதன் முதலில் வாங்கிய காரில் கூட நிழல்கள் என்பதற்கு பதிலாக அதற்கு இணையான ஆங்கில வார்த்தை ‘Shadows’ என எழுதியிருந்தாராம். இதை பார்த்த சிவாஜி நிழல்கள் ரவியிடம் ‘ஏன் ஊரும் உறவும், வாழ்க்கை என்று வரிசையாக எழுதிக் கொள்வதுதானே’ என கிண்டல் செய்திருக்கிறார். அந்த இரு படங்களும் சிவாஜியுடன் நிழல்கள் நடித்த படங்களாகும்.
இதையும் படிங்க: மே மாதம் களமிறங்கும் முக்கிய திரைப்படங்கள்!.. டேக் ஆப் ஆகுமா தமிழ் சினிமா?!..
நிழல்கள் ரவி எத்தனை படங்களில் நடித்தாலும் ரனியுடனான அந்த ரேப்போ எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. மாப்பிள்ளை, அண்ணாமலை போன்ற படங்களில் நிழல்கள் ரவியின் கதாபாத்திரம் பெரும் கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக மாப்பிள்ளை படத்தில் அவர் சொல்லும் ‘ நீட்டு’ என்ற ஒரே ஒரு டையலாக் ரஜினியின் பஞ்ச் டையலாக்கை விட மிகவும் பிரபலமானது.
முதல் இரண்டு நாள்கள் நிழல்கள் ரவியை சும்மாவே நிற்க வைத்து சூட்டிங் எடுத்திருக்கிறார்கள். இதில் மிகவும் கடுப்பாகி விட்டாராம் ரவி. ஏதாவது செய்து அனைவரின் கவனத்தை ஈர்க்கவேண்டுமே என காரில் போகும் போது யோசித்துக் கொண்டே சென்றாராம். அப்போது ரோடு முழுவதும் ராஜீவ் காந்தி புகைப்படத்துடன் காங்கிரஸ் சின்னமான கைச் சின்னத்தை வரைந்து பக்கத்தில் ‘ நீட்டு’ என எழுதியிருப்பதை ரவி பார்த்திருக்கிறார்.
இதையும் படிங்க: தமிழில் அதிக வசூல் செய்த டாப் 20 படங்கள்… நீங்க நினைச்சது இருக்கான்னு பாருங்க!.
அதை தன் மனதில் ஏற்றி வைத்துக் கொண்டு மறு நாள் படப்பிடிப்பில் ஸ்ரீவித்யாவுக்கும் ரஜினிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் காட்சி. இதில் இடையே ரவி இடைமறித்து பேச முற்படும் போது ரஜினி ‘சீவிடுவேன்’ என்று சொல்ல வேண்டும். அதே போல் ரஜினி சொல்ல அதன் பிறகு யாரும் எதிர்பாராத விதமாக ரவி ‘ நீட்டு’ என சொல்லியிருக்கிறார். அனைவருக்கும் ஆச்சரியம். என்ன சொன்னீங்க? என்ன சொன்னீங்க? நல்லா இருக்கே என ரஜினி மிகவும் கை தட்டி சிரித்தாராம்.
அதிலிருந்து படமுழுக்க ரவி அதையே தான் சொல்லிக் கொண்டிருப்பார். படம் பார்த்து வெளியே வந்த ரசிகர்களும் நீட்டு என்றே சொல்வதை பார்த்து சந்தோஷப்பட்டாராம் நிழல்கள் ரவி.
இதையும் படிங்க: ஒரே ஆண்டில் 10 படங்கள்!.. பாண்டியனை வீழ்த்திய அந்த குதிரை!.. நடந்தது இதுதான்..