அமலாபால் அசந்த நேரமா பார்த்து ஆட்டையை போட்டுட்டாரே!.. வைரலாகும் வீடியோ.. என்ன நடக்கது அங்க!..

Published on: April 11, 2024
---Advertisement---

கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் நடிகை அமலாபால் சமீபத்தில் தனது வளைகாப்பு நிகழ்ச்சியை கோலாகல மகன் நடத்தி இருந்தார். அதன் புகைப்படங்கள் வெளியான நிலையில், ஏகப்பட்ட பிரபலங்கள் நடிகை அமலாபாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். சீக்கிரமே குட்டி அமலா பாலோ அல்லது மினி ஜெகத் தேசாய் பிறக்க வேண்டும் என சக நடிகைகளும் வாழ்த்தினர்.

தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கணவருடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களை வெளியிட்டு வரும் அமலாபால் தற்போது புதிதாக ரெஸ்டாரன்ட் ஒன்றுக்கு சென்றபோது தனது ஜூஸை திருட்டுத்தனமாக கணவர் ஆட்டையை போட்டு குடிக்கும் வீடியோவை வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.

இதையும் படிங்க: உலகத்துலயே பொண்டாட்டியை ஒருதலையா காதலிக்கிறது இவராத்தான் இருப்பாரு!.. ரோமியோ விமர்சனம் இதோ!..

முன்பெல்லாம் ஹோட்டலுக்கு சென்றால் இதே போல எனது உணவை திருடி என் தம்பி சாப்பிட்டு விடுவான், இப்போது அந்த வேலையை என்னுடைய கணவர் பார்க்கிறார். இதைப்போல உங்கள் வாழ்க்கையில் உங்கள் உணவை திருடி சாப்பிடுவது யார் என கமெண்ட் பண்ணுங்க என யூடியூப் சேனல் வைத்திருக்கும் பெண் போல கேப்ஷன் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலா பாலுக்கு இரண்டாம் முறையாக திருமணம் நடைபெற்றது. சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அமலாபால் மைனா, தெய்வத்திருமகள், தலைவா என பல படங்களில் நடித்து வந்தார். இயக்குனர் ஏ.எல். விஜய் படங்களில் நடித்து வந்த அமலாபால் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் குழந்தை ஏதும் பிறக்கவில்லை.

இதையும் படிங்க: மே மாதம் களமிறங்கும் முக்கிய திரைப்படங்கள்!.. டேக் ஆப் ஆகுமா தமிழ் சினிமா?!..

அமலா பாலை சில பல பிரச்சனைகள் காரணமாக ஏ.எல். விஜய் விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் அவர் ஒரு திருமணம் செய்து கொண்டு மனைவி மக்களுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.

சன்னியாசியாக போய்விடுவாரோ அமலாபால் எதுனா ஒரு பதிவிட்டு வந்த போட்டோக்களை பார்த்து ஷாக் ஆன ரசிகர்களுக்கு திடீரென கடந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தி விட்டார். சமீபத்தில் பிருத்விராஜுக்கு ஜோடியாக அமலா பால் நடித்து வெளியான ஆடுஜீவிதம் படம் 150 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/p/C5njs4Dvydo/

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.