Connect with us

latest news

உலகத்துலயே பொண்டாட்டியை ஒருதலையா காதலிக்கிறது இவராத்தான் இருப்பாரு!.. ரோமியோ விமர்சனம் இதோ!..

அறிமுக இயக்குனர் விநாயகர் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, விடிவி கணேஷ், யோகி பாபு, ஷாரா போன்ற படம் நடிப்பில் உருவாகியுள்ள ரோமியோ திரைப்படம் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த ஆண்டு இதுவரை வெளியான எந்த ஒரு தமிழ் படமும் பெரிதாக ரசிகர்களை கவராத நிலையில், இந்த ரோமியோ எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்தது என்றால் ஓரளவுக்கு என்று தான் சொல்ல முடியும்.

இதையும் படிங்க: மே மாதம் களமிறங்கும் முக்கிய திரைப்படங்கள்!.. டேக் ஆப் ஆகுமா தமிழ் சினிமா?!..

அரதப் பழசு கதையை எடுத்துக் கொண்டு இயக்குனர் உலகத்திலேயே ஒரு தலையாக மனைவியை காதலிப்பது விஜய் ஆண்டனி மட்டும் தான் என்பது போல ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

குடும்ப கஷ்டத்திற்காக மலேசியாவுக்கு சென்று வேலை பார்த்து வரும் அறிவழகன் (விஜய் ஆண்டனி) 35 வயது ஆகியும் தனக்கு திருமணம் ஆகாத நிலையில், தமிழ்நாட்டுக்கு திரும்பி தனது சொந்த ஊருக்கு ஒரு துக்க நிகழ்ச்சிக்காக செல்கிறார். அங்கே அவர் கண்ணில் படும் லீலா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிருணாளினி ரவியை திருமணம் செய்து கொள்கிறார்.

இதையும் படிங்க: தமிழில் அதிக வசூல் செய்த டாப் 20 படங்கள்… நீங்க நினைச்சது இருக்கான்னு பாருங்க!.

சினிமாவில் எப்படியாவது ஹீரோயின் ஆக வேண்டும் என கனவுடன் இருக்கும் மிருணாளினி ரவி திருமணத்துக்கு பிறகு தனது கனவு சுக்கு நூறாக உடைந்து விட்டது என்பதால் கணவரை பிரிய நினைக்கிறார். நமக்கு கிடைச்சது லேட்டு. அதிலும் லட்டு போல கிடைத்துள்ள மனைவியை விட்டு விடுவதா? எப்படியாவது அவரை நம்மை காதலிக்க வைக்க வேண்டும் என்கிற முயற்சியில் ஒருதலைக் காதலுடன் போராடும் கணவராக “ மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ” என பாடாத குறையாக போராடி வருகிறார்.

அவருக்கு உதவி செய்யும் ஆட்களாக யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் காமெடி பண்ணுகிறேன் எனும் பெயரில் விஜயின் பீஸ்ட் படத்தில் எப்படி மொக்கை போட்டார்களோ அதைவிட மோசமாக இந்த படத்தில் பிளேடு போட்டுள்ளனர்.

இதையும் படிங்க: விஜய் பேர்ல இருக்கனும்னு நினைச்சேன்! சாய்பாபா கோயில் பற்றி ஷோபா சொன்ன தகவல்

விஜய் ஆண்டனி மற்றும் அவருக்கு போட்டியாக ஹீரோயின் மிருணாளினி ரவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சில இடங்களில் போரடித்தாலும் பொதுவாக படமாக போரடிக்காமல் செல்கிறது. ஆனால் எல்லாமே பார்த்த படம் போலவே உள்ள நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களும் கேட்ட பாடல்களை போல இருப்பது தான் பெரிய குறையாக உள்ளது.

ரோமியோ – பரவாயில்லை!

ரேட்டிங் – 2.5/5.

google news
Continue Reading

More in latest news

To Top