Connect with us
dhamu copy

Cinema News

கில்லி படத்த கொண்டாடுற நீங்க இத மறந்துட்டீங்களே! ஓட்டேரியா நடிச்சாலும் இப்படி ஒரு வருத்தமா

Actor Dhamu: 2004 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படமான கில்லி திரைப்படம் இன்று மறுபடியும் ரீ ரிலீஸ் ஆகி அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கின்றது. கிட்டத்தட்ட கில்லி திரைப்படம் ரீ ரிலீஸில் 100 கோடிக்கும் மேலாக வசூல் வேட்டையை நடத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, ஆஷிஷ் வித்யார்த்தி, பிரகாஷ்ராஜ் உட்பட பலரும் நடித்த திரைப்படம் கில்லி .கபடியை மையப்படுத்தி அமைந்த இந்த திரைப்படம் ரிலீசான சமயத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. எப்பொழுது பார்த்தாலும் போர் அடிக்காத படங்களில் கில்லி திரைப்படமும் ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்திருக்கும்.

இதையும் படிங்க:இதெல்லாம் செட் ஆகாது!.. சினிமா உலகம் சொன்ன புகார்!.. ஆனா ஹிட் கொடுத்து ட்ரீட் கொடுத்த எம்.ஜி.ஆர்..

சமீப காலமாக பல பெரிய நடிகர்களின் ஹிட் படங்கள் மறுபடியும் ரீ ரிலீஸ் செய்து அதன் மூலம் ரசிகர்களை திரையரங்குக்கு வரவைக்க முயற்சிகள் நடந்து கொண்டு வருகின்றன. ஏனெனில் எந்த ஒரு பெரிய நடிகரின் சமீபத்திய படங்கள் அந்த அளவுக்கு ரிலீஸ் ஆகவில்லை. அதனால் அவர்கள் நடித்த முந்தைய படங்கள் ரீ ரிலீஸ் செய்து அதன் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

அதில் கில்லி திரைப்படம் மற்ற படங்களை விட ரீ ரிலீசில் பெரிய சாதனையை படைத்து வருகிறது. 20 வருடத்திற்கு முன்பே வெளியான இந்த படம் இன்றளவும் மக்கள் மத்தியில் பெரிய அளவு கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கில்லி திரைப்படத்தில் ஓட்டேரி நரியாக நடித்தவர் நடிகர் தாமு. இந்த படத்திற்கு பிறகு அவரும் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இதையும் படிங்க: இசையா? வரிகளா? எது பெரியது? வைரமுத்து – இளையராஜா சொல்வது என்ன? அனிருத் திருந்துவாரா?..

கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டதை பற்றி ஒரு விழாவில் பேசிய தாமு 20 வருடங்களுக்கு முன்பு வெளியான படத்தை இப்பொழுது கொண்டாடுகிறீர்கள். அதே 20 வருடத்திற்கு முன்பு நடப்பட்ட மரங்கள் இன்று வளர்ந்து நமக்கு நிழலை தருகின்றன. அந்த மரங்களை நட்டவர்களை பற்றி என்றைக்காவது பேசியிருக்கிறீர்களா? அல்லது அவர்களுக்கு நன்றி தான் சொல்லி இருக்கிறீர்களா? என்று அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே நடிகர் தாமு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாமின் சிறந்த மாணவர். அவருடைய கொள்கைகள் அவருடைய கனவுகளை இப்போது தாமு ஒவ்வொரு ஊராக சென்று அதை  நனவாக்கிக் கொண்டு வருகிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top