Connect with us

Cinema News

அந்த பாட்டுல விஜயை திட்டவில்லை!. அது அந்த ஹீரோவுக்கு போட்டதுதான்!. வெளிவந்த தகவல்…

Ajithkumar: நடிகர் அஜித்குமார் எப்போதுமே தன்னுடைய நடிப்புக்கு தனி ஸ்டைலை கொண்டு இருப்பார். ஆனால் அவரே அட்டகாசம் படத்தில் தன்னை உயர்த்தி யாருக்கோ மெசேஜ் சொல்வது போல ஒரு பாடலை பாடி இருப்பார். அது விஜயிற்கு சொல்லப்பட்டது எனக் கூறப்பட்ட நிலையில், இயக்குனர் சரண் புதிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.

2004 ஆம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த திரைப்படம் அட்டகாசம். இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். படம் மிகப்பெரிய வசூலை பெறவில்லை என்றாலும் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: ரஜினியை மரியாதை இல்லாமல் ‘வாடா’ என அழைத்த அறிமுக நடிகை!.. பதட்டமான படப்பிடிப்பு!..

பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் அமைந்த எல்லா பாடல்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் உனக்கென்ன பாடல் யாருக்கும் மெசேஜ் சொல்வது போல இருந்ததாக ரசிகர்களிடம் இன்றும் பேச்சுக்கள் இருக்கிறது. அஜித் ரசிகர்கள் இது விஜயை எதிர்த்து பாடிய பாடல் தான் என நம்பிக் கொண்டிருக்கின்றன.

அதை உறுதிப்படுத்தும் வகையில், இசையமைப்பாளர் பரத்வாஜ் அளித்த பேட்டி ஒன்றில்,  அந்த பாடல் பிளான் பண்ணி எழுதப்பட்டது தான் எனக் கூறியிருப்பார். இது குறித்து இயக்குனர் சரண் கூறுகையில், பொதுவாக அஜித் தன்னுடைய பாடல்கள் விஷயத்தில் தலையிடவே மாட்டார்.

இதையும் படிங்க: விஜய் ஒன்னும் லாரன்ஸ் இல்ல! சாய்பாபா கோயில் இவர் கட்டியதே இல்லையாம்.. அப்புறம் எதுக்கு இந்த வேஷம்

உனக்கு என்ன பாடலை எழுதியது நான்தான். ஆனால் அது ரசிகர்கள் நினைப்பது போல விஜய் குறித்து எழுதியது இல்லை. அஜித்தின் ஆரம்ப காலத்தில் அவரை அசிங்கப்படுத்திய சில நடிகர்களை மனதில் வைத்து எழுதியது தான். அதுமட்டுமல்லாமல், அது வெறும் குறியீடு தான். அமர்க்களம் படத்தில் காலம் கழிகாலம் ஆகிப்போச்சுடா பாடலில் அண்ணனுக்கு ஜே காதல் மன்னனுக்கு ஜே என வரிகள் வைத்திருந்தேன்.

அதுப்போல இதுவும் ஒரு குறியீடாக அமைத்தேன் என்கிறார். அஜித்தின் ஆரம்பகாலங்களில் அவரை பிரசாந்த் உள்ளிட்ட சில நடிகர்கள் அசிங்கப்படுத்தியதாக சில நிகழ்வுகள் இருக்கிறது. இதை குறித்து கூட சரண் சொல்லி இருக்கலாம் எனவும் ரசிகர்கள் கிசுகிசுக்க தொடங்கி இருக்கின்றனர்.

Continue Reading

More in Cinema News

To Top