Cinema History
விரக்தியில் விபரீத முடிவெடுத்த பிரபலம்!.. போனில் பேசி தற்கொலையை தடுத்த எம்.ஜி.ஆர்!..
நடிகர் எம்.ஜி.ஆர் சிறுவயதாக இருக்கும் போதே வறுமையின் உச்சத்தை பார்த்தவர். நீதிபதியாக இருந்த அவரின் தந்தை இலங்கையில் பணிபுரிந்த போது உடல்நலக்குறைவாக இருந்த போது அங்கேயே மரணமடைந்தார். அதன்பின் எம்.ஜி.ஆரின் அம்மா சத்யா தனது இரு மகன்களையும் அழைத்துக்கொண்டு தமிழகம் வந்தார்.
கும்பகோணத்தில் ஒரு சிறிய வீட்டில் மகன்களுடன் தங்கி இருந்தார். அதோடு, தனது உறவினர் ஒருவரின் வீட்டில் பத்து பாத்திரம் தேய்க்கும் வேலையும் செய்து வந்தார். வீட்டில் வறுமை தலைவிரித்து ஆடியதால் மகன்கள் இருவரையும் நாடகத்திற்கு அனுப்புவது என முடிவு செய்தார்.
இதையும் படிங்க: விஜயகாந்தை வைத்து படமெடுத்த எம்.ஜி.ஆர் பட இயக்குனர்கள்!. அட இத்தனை பேரா!..
இப்படித்தான் எம்.ஜி.ஆரின் நடிப்பு வாழ்க்கை துவங்கியது. ஒரு நாடக கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். நாடகங்களில் கிட்டத்தட்ட 30 வருடங்கள் பல கதாபாத்திரங்களிலிலும் நடித்தார். அதன்பின் சினிமாவில் சேர்ந்து ஒரு பெரிய நடிகராகவும் மாறினார். எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையின் துவக்கத்தில் உடனிருந்தவர் கவிஞர் கண்ணதாசன். எம்.ஜி.ஆரின் சில படங்களுக்கு கதை, வசனம், பாடல்களை எழுதினார்.
குறிப்பாக எம்.ஜி.ஆருக்கு பல தத்துவ மற்றும் காதல் பாடல்களை கண்ணதாசன் எழுதி இருந்தார். ஆனால், இருவரும் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் தன்னை இணைத்துக்கொண்டிருந்தனர். இதனால், அரசியல் மேடைகளில் எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சித்து பேசினார் கண்ணதாசன்.
ஆனால், படங்களை தயாரித்து நஷ்டமடைந்த கண்ணதாசன் கடனாளி ஆனார். இதனால், பலருக்கும் பதில் சொல்ல வேண்டிய கஷ்டமான நிலைக்கு ஆளானார் கண்ணதாசன். ஒருமுறை வீட்டில் நண்பர் ஒருவருடன் எம்.ஜி.ஆர் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது.
இதையும் படிங்க: முதல் சந்திப்பிலேயே கேப்டனை ஆச்சர்யப்படுத்திய எம்.ஜி.ஆர்!.. நடந்தது இதுதான்!..
போனை எடுத்து பேசிய எம்.ஜி.ஆர் ‘பிரச்சனைக்கு தற்கொலை முடிவல்ல. உங்களுக்கு தேவையான பணத்தை நாளை எனது உதவியாளரிடம் கொடுத்து அனுப்புகிறேன்’ என சொல்லிவிட்டு போனை வைத்தார். அதன்பின்னர்தான் பேசியது கண்ணதாசன் என அங்கிருந்த நண்பரிடம் சொன்னார்.
‘உங்களை பல மேடைகளில் திட்டி பேசிய கண்ணதாசனுக்கா உதவி செய்கிறீர்கள்?’ என கேட்டபோது எம்.ஜி.ஆரோ கூலாக ‘நம்மை திட்டுபவர்களும் நமக்கு வேண்டும். அவர் என்னை திட்டியதில் எனக்கு எந்த கோபமும் இல்லை’ என சொல்லி இருக்கிறார். அதோடு, ஜப்திக்கு வரவிருந்த கண்ணதாசனின் வீட்டை மீட்டு கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.