‘குட் பேட் அக்லி’ இப்படித்தான் வந்தது! ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த சர்ப்ரைஸ்..

Published on: April 12, 2024
aadhik
---Advertisement---

Good Bad Ugly Movie: அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு பிறகு விடாமுயற்சி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு வெளிநாடு செல்ல இருக்கிறது. படத்தின் 60% படப்பிடிப்பு முடிந்த நிலையில் எஞ்சியுள்ள 40 % படப்பிடிப்பை எப்படியும் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

படம் எப்படியும் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சிக்கு பிறகு அஜித் அடுத்ததாக ஆதிக்கின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணைய இருக்கிறார். படத்தின் பூஜைகள் எல்லாம் போடப்பட்டன. ஜூன் மாதத்தில் இருந்து குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று சொல்லப்படுகிறது. படத்தை அடுத்தவருடம் பொங்கல் ரிலீஸ் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: விரக்தியில் விபரீத முடிவெடுத்த பிரபலம்!.. போனில் பேசி தற்கொலையை தடுத்த எம்.ஜி.ஆர்!..

இந்த நிலையில் ஆதிக் திருமணத்திற்கு பிறகு முதன் முறையாக ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுக்கும் போது அஜித்தை பற்றி சில விஷயங்களை பேசியிருக்கிறார். அதாவது நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்தே அஜித் சார் எனக்கு மிகவும் நெருக்கமாகி விட்டார். எப்பொழுதுமே பாசிட்டிவ்வான விஷயங்களையே விதைக்க முயற்சி செய்வார்.

அந்த பாசிட்டிவ் நிலைக்கு நம்மை தள்ள வைப்பார். நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும் போதே நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் என்று அஜித் சார் அப்பவே கூறியிருந்தார். மேலும் மார்க் ஆண்டனி படம் கூட அஜித் சாரின் உந்துதலின் பேரில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் மார்க் ஆண்டனி படம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே குட் பேட் அக்லி படம் முடிவாகி விட்டது.

இதையும் படிங்க: ரஜினி படம்தானே.. அப்படித்தான் இருக்கும்! பங்கமாய் கலாய்த்த ஜெய்சங்கர்

இருந்தாலும் ஒரு பெரிய வெற்றி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இவ்ளோ நாள் பொறுமையாக இருந்தேன் என்று ஆதிக் கூறினார். மேலும் மார்க் ஆண்டனி 2 படம் கண்டிப்பாக வரும் என்றும் ஒரு பெரிய சர்ப்ரைஸும் ரசிகர்களுக்காக கொடுத்திருக்கிறார் ஆதிக்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.