கேப்டனாக மாறிய வினுசக்கரவர்த்தி! கலாட்டா செய்த ரசிகர்களை என்ன செய்தார் தெரியுமா?

Published on: April 13, 2024
vinu
---Advertisement---

Actor Vinuchakkaravarthi: தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகராக இருந்தவர் நடிகர் வினுச்சக்கரவர்த்தி. நடிகை சில்கை சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை வினுச்சக்கரவர்த்திக்கே உண்டு. கார்த்திக், ரஜினி, பிரபு, சத்யராஜ், அஜித், விஜய், என அனைத்து முன்னனி நடிகர்களின் படங்களிலும் வினுசக்கரவர்த்தி நடித்திருக்கிறார். அவருக்கே உண்டான சிறப்பம்சம் அவருடைய தனித்துவமான குரல்தான்.

அவருடைய குரலை இன்று வரை பல பேர் மிமிக்ரி செய்து அவரை நாள்தோறும் நினைவு கூர்ந்து வருகின்றனர். நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், படகா என 4 நான்கு மொழிகளிலும் சுமார் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பெரும் சாதனைப் படைத்திருக்கிறார் வினுச்சக்கரவர்த்தி.

இதையும் படிங்க: மக்கள் திலகம் எம்ஜிஆருடன் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்த கதாநாயகிகள்!… யார் யார்னு தெரியுமா?

வண்டிச்சக்கரம் படத்தில் சில்க்கை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமான தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் சில்க் ஸ்மிதாவை திரைப்பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் சித்தரித்த விதத்தை இவர் கடுமையாக விமர்சித்து இருந்தார்.மேலும் இந்தப் படத்தில் சில்க் கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்திருந்தது சரியான தேர்வல்ல என்றும் வினு சக்கரவர்த்தி கூறியிருந்தார்.

இந்த நிலையில் வினு சக்கரவர்த்தி எவ்வளவு தைரியமானவர் என்பதை தெரிந்து கொள்ளும் பொருட்டு ஒரு சம்பவத்தை சித்ரா லட்சுமணன் கூறினார். சித்ராலயா கோப்பு திரைக்கதையில் ஒரு நாடகம் அரங்கேறியது. அந்த நாடகத்தில் வினுச்சக்கரவர்த்தி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம். அவருடைய நடிப்பை விமர்சித்து நாடகத்தை பார்க்க வந்த ரசிகர்கள் நான்கு பேர் மிகவும் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்களாம்.

இதையும் படிங்க: முத்தம் என்ற வார்த்தைக்கே இவ்வளவு அக்கப்போரா? எம்ஜிஆர் படத்திற்கு வந்த சிக்கல்.. தடுமாறிய ஆர்.எம்.வீ

kopu
kopu

தொடர்ந்து கிண்டலடித்ததை பொருத்துக் கொள்ளாமல் நாடக மேடையில் இருந்து கீழே இறங்கி வந்த வினுசக்கரவர்த்தி அந்த நான்கு பேரையும் துவைத்து எடுத்திருக்கிறார். அதனால் நாடகக் குழு நாடகத்தை நடத்த மாட்டோம் என சொல்லியிருக்கிறார்கள். நாடக துறையில் சித்ராலயா கோபு மீது ஒரு மதிப்பு இருக்கிற காரணத்தால் அவர் தலையிட்டு இந்த பிரச்சினையை முடித்துவைத்தாராம்.

நாடகமோ சினிமாவோ பாராட்டினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். விமர்சித்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதைவிட்டு இப்படி ஆத்திரப்படுவதால் விளைவு நமக்குத்தான் என சித்ராலயா கோபு ஒரு கட்டுரையில் இந்த சம்பவம் குறித்து எழுதியிருக்கிறாராம்.

இதையும் படிங்க: கடைசி நேரத்தில் பன்ச் வசனத்தை மாற்றிய ரஜினி!. பாட்ஷா படத்தில் நடந்த செம மேஜிக்!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.