Connect with us
baasha

Cinema History

கடைசி நேரத்தில் பன்ச் வசனத்தை மாற்றிய ரஜினி!. பாட்ஷா படத்தில் நடந்த செம மேஜிக்!..

நடிகர் ரஜினியின் திரை வாழ்வில் முக்கியமான படமாக அமைந்தது பாட்ஷாதான். இந்த படத்தில் ரஜினிக்கு அவ்வளவு பில்டப் காட்சிகள் இருக்கும். டானாக இருந்த ஒருவன் அதை விட்டுவிட்டு குடும்பத்துடன் ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறான். வில்லன் குரூப் மீண்டும் இவரை துரத்த என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.

பக்கா ஆக்‌ஷன் மற்றும் கூசும்ப்ஸ் காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது. இப்படத்தை ஆர்.எம்.வீரப்பன் தயாரிக்க சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படத்தில் நக்மா காதாநாயகியாக நடிக்க தேனிசை தென்றல் தேவா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதையும் படிங்க: ஓவரா பேசிய இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த ரஜினிகாந்த்!… சூப்பர்ஸ்டார் அவ்வளவு கோபக்காரரா?!..

பாட்ஷா ஹிட் அடித்தபின் இந்த படத்தின் சாயலில் கொஞ்சம் கொஞ்சம் மாற்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என எல்லா மொழியிலும் பல திரைப்படங்கள் வெளிவந்தது. அதில் பெரும்பாலானவை வெற்றிப்படங்கள்தான். இந்த படத்தில் ரஜினி பேசிய பன்ச் வசனங்கள் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம்.

கெட்டவனுக்கு ஆண்டவன் அள்ளி கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான். நல்லவன ஆண்டவன் சோதிப்பான். ஆனா கைவிட மாட்டான் போன்ற வசனங்கள் ரசிகர்களிடம் ரீச் ஆனது. குறிப்பாக ’நான் ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி’ என ரஜினி அடித்த பன்ச் ரசிகர்களிடம் அதிக அளவில் ரீச் ஆனது.

இதையும் படிங்க: விஜய் நழுவ விட்ட முக்கிய படங்கள்!.. அந்த கதையில் நடிச்சதால வாழ்க்கையே மாறிய பிரபலங்கள்…

முதலில் இந்த வசனம் ‘நான் ஒரு வாட்டி சொன்னா’ என்றுதான் இருந்திருக்கிறது. ஆனால், டேக் போகும் முன் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவை அழைத்து ‘ஒரு வாட்டி நல்லா இருக்கா?.. ஒரு தடவ நல்லா இருக்கா?’ என ரஜினி கேட்டிருக்கிறார். அதோடு ‘தடவ’ என சொல்வதில் ஒரு அழுத்தம் இருக்கிறது’ என அவர் சொல்ல இயக்குனரும் ‘இதையே சொல்லுங்கள்’ என சொல்லிவிட்டார்.

இந்த படம் வெளியான பின் சிறுசு முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த வசனத்தை கூறினார்கள். இதுவரை பல படங்களில் ரஜினி பல பன்ச் வசனங்களை பேசி இருந்தாலும் இந்த வசனம் பெரிய அளவில் ரீச் ஆனது. அதை அன்றே கணித்து பேசிய ரஜினி ஒரு தீர்க்கதரிசி என்றே சொல்ல வேண்டும்.

google news
Continue Reading

More in Cinema History

To Top