மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் சென்னையில் பிறந்து வளர்ந்த நிலையில், அவருக்கு டாக்டர் பட்டமும் சென்னையிலேயே தற்போது கிடைத்திருக்கிறது.
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான மகதீரா படத்தின் மூலமே தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் ராம் சரண். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் படத்தை தெலுங்கில் ரீமிக்ஸ் செய்து நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.
Also Read
இதையும் படிங்க: விஜய் பட இயக்குனரிடம் சவால் விட்டு ஜெயித்த கோவை சரளா!.. சும்மா சொல்லி அடிச்சிருக்காங்களே!..
மீண்டும் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து ராம்சரண் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் இந்திய சினிமா ரசிகர்களை மட்டுமின்றி உலக சினிமா ரசிகர்களையே ரசிக்க வைத்து ஆஸ்கர் மேடையில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை அந்தப் படம் சிறந்த பாடல் மற்றும் சிறந்த இசைக்காக பெற்று இந்தியர்களை பெருமைப்பட வைத்தது.
அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்துள்ள ராம்சரண் அடுத்தடுத்து தனது படங்களின் அறிவிப்புகளையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: பட்டுப் புடவையில் பை ஒன் கெட் ஒன் ஃஃபாரா?.. விஜய் டிவி நடிகை செய்த பர்ச்சஸ் வீடியோ!…
இந்நிலையில், சிம்பு உள்ளிட்ட நடிகர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய சென்னையை சேர்ந்த வேல்ஸ் பல்கலைக்கழகம் தற்போது ராம் சரணுக்கும் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
ராம்சரனின் மனைவி உபாசனாவின் தாத்தா தான் அப்போலோ நிறுவனத்தின் ஓனரே. இப்படியிருக்கும் நிலையில், நான் எப்படி டாக்டர் ஆகி காட்டுறேன் பாரு என இந்த பட்டத்தை வாங்கி மாஸ் காட்டியிருக்கிறார் மெகா ஸ்டார் மகன்.
இதையும் படிங்க: நடிகர் கொடுத்த பரிசை கடைசி வரை பாதுகாத்து வந்த ஜெயலலிதா!.. வெளியே வந்த சீக்ரெட்..



