Connect with us
ramarajan

Cinema News

கவுண்டமணி எப்பவுமே அப்படித்தான்!.. ஒன்னு நடக்காம போச்சி!.. ஃபீல் பண்ணி பேசும் ராமராஜன்..

திரையுலகில் பல நடிகர்களின் திரைப்படங்கள் கவுண்டமணி – செந்தில் காமெடி காட்சிகளால் ஓடியிருக்கிறது. சரியாக சொல்ல வேண்டுமானால் கவுண்டமணியின் காமெடி காட்சிகள் பல திரைப்படங்களை காப்பாற்றி இருக்கிறது. 80களிலில் இருந்து சுமார் 30 வருடங்கள் கவுண்டமணியின் காமெடி கொடி கட்டி பறந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

கவுண்டமணியும், செந்திலும் துவக்கத்தில் நாடகங்களில் நடித்துவந்து பின்னர் சினிமாவில் நுழைந்தார்கள். பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில் உள்ளிட்ட படங்களில் பாக்கியராஜ் வாய்ப்பு கொடுத்தார். அதை கவுண்டமணி சரியாக பயன்படுத்திகொண்டார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார் கவுண்டமணி.

இதையும் படிங்க: நிஜ வாழ்விலும் அவர் அப்படிப்பட்டவர்தான்!.. கவுண்டமணி ரகசியத்தை சொல்லும் கோவை சரளா!..

சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடித்து பட வாய்ப்புகளை தவிர்த்து வந்தார். ஆனால், அவரை சமாதானம் செய்து கரகாட்டக்காரன் படத்தில் நடிக்க வைத்தார் கங்கை அமரன், அந்த படத்தில் இடம் பெற்ற காமெடி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

அதன்பின் கவுண்டமணி மீண்டும் பல வருடங்கள் காமெடியனாக கலக்கினார். அதுவும் ராமராஜன் படங்கள் என்றாலே கவுண்டமணியும் செந்திலும் கண்டிப்பாக இருப்பார்கள். இளையராஜாவை போல ராமராஜனின் வெற்றிக்கு கவுண்டமணி முக்கிய காரணமாகவும் இருந்தார்.

இதையும் படிங்க: கவுண்டமணியையே அழ வைத்த இயக்குனர்… டகால்டிக்கே டகால்டியா?.. அப்படி என்னதான் நடந்தது?..

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த ராமராஜன் ‘கவுண்டமணி அண்ணன் எப்போதும் நக்கலடிப்பார். அவர் செட்டில் இருந்தாலே ஜாலியாக இருக்கும். கரகாட்டக்காரன் படத்துக்கு பின் நான், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் சேர்ந்து நடிப்பது போல ஒரு கதையை உருவாக்கினேன்.

ஆனால், அதிக பட்ஜெட் காரணத்தால் அந்த படத்தை எடுக்க முடியாமல் போய்விட்டது. இப்போது கவுண்டமணி அண்ணன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இது பெரிய விஷயம். இப்போதும் கூட உன்னுடன் வருவது போல நான் நடிக்கிறேன் என என்னிடம் சொல்லுவார். இனிமேல் அவர் தனியாக ட்ராக் காமெடி எல்லாம் செய்ய மாட்டார். காமெடியில் அவர் கிங்’ என ராமராஜன் சொல்லி இருக்கிறார்.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top