நான் நினைச்சுக் கூட பாக்கல!.. வரலட்சுமி நிச்சயதார்த்தம் பற்றி இப்படி சொல்லிட்டாரே விஷால்!..

Published on: April 15, 2024
vishal
---Advertisement---

Vishal Varu: தமிழ் சினிமாவில் புரட்சித்தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஷால். செல்லமே என்ற படத்தின் மூலம் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான விஷால் ஆரம்பத்தில் நடிகர் அர்ஜூனிடம்தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். தொடர்ந்து அனல்பறிக்கும் வசனங்களை பேசி ரசிகர்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றார் விஷால்.

இந்த நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் தனியாக ஒரு கட்சி ஆரம்பித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே விஜய் கட்சி ஆரம்பித்திருக்கும் நிலையில் அவரின் தீவிர ரசிகரான விஷாலும் கட்சி ஆரம்பிப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: சும்மா சும்மா போஸ்டர் விடும் சூர்யா!.. புத்தாண்டு அதுவுமா கடுப்பான ஃபேன்ஸ்?.. கங்குவா ரிலீஸ் எப்போ?

இந்த நிலையில் விஷால் சமீபத்தில் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அதில் வரலட்சுமியின் நிச்சயதார்த்தம் குறித்து விஷாலிடம் கேட்கப்பட்டது. அப்போது வரலட்சுமிக்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்று கூறியிருந்தார். மேலும் யாருக்கும் எளிதாக வாய்ப்பு கிடைத்து விடாது. அதில் வரலட்சுமிக்கு தெலுங்கில் ஒரு நல்ல மார்கெட் அமைய அதை சிறப்பாக கொண்டு செலுத்தினார்.

திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கதாபாத்திரத்திற்கு பிறகு அனுமன் படத்தில் வரலட்சுமியின் கதாபாத்திரத்தை தான் மிகவும் மெய்சிலிர்த்து பார்த்தேன். சிறப்பாக நடித்திருந்தார். உண்மையிலேயே அவருக்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். அவருடைய கெரியரையும் தாண்டி அடுத்த லெவலுக்கு அவருடைய வாழ்க்கையை நகர ஆரம்பித்திருக்கிறார் வரலட்சுமி என விஷால் கூறினார்.

இதையும் படிங்க: விஜய்க்கு போட்டியா வெயிட்டா டீசரையே இறக்கிய மைக் மோகன்!.. அடடா.. ஹரா படத்துல கை விளையாடுது கன்ல!..

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.