2 மெடிக்கள் சீட்!.. லண்டனில் இசை பயிற்சி!. பிரசாந்த் பற்றி யாருக்கும் தெரியாத 10 விஷயங்கள்!..

Published on: April 17, 2024
prashanth
---Advertisement---

80களில் தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என பல படங்களில் கலக்கியவர் தியாகராஜன். அவரின் மகன் பிரசாந்த். தனது மகன் பிரசாந்தை சினிமாவில் நடிக்க வைக்கும் எந்த ஆர்வமும் தியாகராஜனுக்கு இல்லை. ஆனாலும், திரையுலகம் விடவில்லை. வைகாசி பொறந்தாச்சி படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார் பிரசாந்த்.

முதல் படமே சூப்பர் ஹிட். பிரசாந்துக்கு ரசிகர்களும் உருவானார்கள். அதன்பின் பல படங்களிலும் நடித்து ஆணழகன், காதல் இளவரன் என்கிற பட்டங்களை பெற்றார் பிரசாந்த். முன்னணி நடிகராக இருந்த பிரசாந்த் சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகள் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார்.

இதையும் படிங்க: செல்போனிலேயே தாலி கட்டிய விஜய் ஆண்டனி!.. இது செம லவ் ஸ்டோரியா இருக்கே!…

அவ்வப்போது சில படங்களிலும் நடித்தாலும் பெரிதாக எடுபடவில்லை. இப்போது விஜயுடன் கோட் படத்தில் அவரின் நண்பர்களில் ஒருவராக நடித்திருக்கிறார். இப்படத்தில் இடம் பெற்ற விசில் போடு பாடலில் அசத்தலாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பழையபடி பிரசாந்த் மீண்டும் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என பலரும் ஆசைப்படுகின்றனர். இந்நிலையில், அவரை பற்றி தெரியாத சில விஷயங்களை இங்கு பார்ப்போம்.

பிரசாந்த் கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றவர். பரதநாட்டியம், ஜிம்னாஸ்டிக், பாக்சிங் எல்லாம் கற்றவர் இவர். பள்ளி படிப்புக்கு பின் இரண்டு மருத்துவ கல்லூரிகளில் இவருக்கு சீட் கிடைத்தது. ஆனால், அதை வேண்டாம் என சொல்லிவிட்டு சினிமாவுக்கு வந்தவர் இவர். குதிரை சவாரி செய்வது, பியானோ வாசிப்பது பிரசாந்துக்கு கை வந்த கலை.

இதையும் படிங்க: கேப்டனின் உண்மையான வாரிசு இவர்தான்!.. அட அவரே சொல்லிட்டாரே!.. ஒருவகையில் சரிதான்!..

சென்னை தி நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஜேய்லூக்காஸ் நகைக்கடை இருக்கும் இடத்திற்கு சொந்தக்காரர் இவர்தான். தமிழ்நாட்டில் கம்ப்யூட்டர் பெரிதாக பரிச்சயம் ஆகாத நேரத்திலேயே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மல்டி மீடியா படித்தவர் இவர். இசையின் மீது இருந்த ஆர்வத்தில் லண்டன் சென்று கற்றுக்கொண்டார்.

ஜீன்ஸ் படத்தில் நடிப்பதற்காக தனக்கு வந்த 7 பட வாய்ப்புகளை மறுத்திருக்கிறார் பிரசாந்த். லண்டன், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பல ஸ்டார் நைட் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார். இவருக்கு ப்ரீத்தி என்கிற தங்கையும் இருக்கிறார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.