Cinema News
உங்களை திட்டுபவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?!.. கேப்டன் விஜயகாந்த் சொன்ன கூல் பதில்!…
பொதுவாழ்க்கையான அரசியல் மற்றும் சினிமாத்துறை ஆகியவற்றில் பிரபலமானலே கடுமையான விமர்சனங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். விமர்சனம் என்றால் பரவாயில்லை, தனி மனித தாக்குகல், கிண்டல், கேலி, நக்கல், பகடி என எல்லாவற்றையும் சந்திக்க வேண்டி இருக்கும்.
அதையெல்லாம் தலையில் ஏற்றிக்கொண்டால் நாம் அடுத்த அடி நகர முடியாது. இதை உணர்ந்தவர்கள் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வாழ்வில் சாதிப்பார்கள். மனம் உடைந்து போகும் மனிதர்கள் காணாமல் போவார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த் என யாரும் இதற்கு தப்பியது இல்லை.
இதையும் படிங்க: விஜய்க்கு அவர் நோ சொல்லி இருக்கவே மாட்டார்… அதான் இதை செய்தோம்.. சீக்ரெட் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!…
எம்.ஜி.ஆரை கடுமையான விமர்சனம் செய்ததோடு அவருக்கு ஏற்பட்ட குரல் பாதிப்பை வைத்து அவருக்கு பிடிக்காதவர்கள் நக்கலடித்தார்கள். ஆனால், அதையெல்லாம் அவர் கண்டுகொண்டதே இல்லை. சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினியை இப்போது வரை கடுமையாக விமர்சிக்கிறார்கள். அது பெரும்பாலும் தனி மனித தாக்குதல்களாகவே இருக்கிறது.
சினிமாவில் பல அவமானங்களை சந்தித்து மேலே வந்தவர்தான் விஜயகாந்த். அதனால்தான் தன் பட்ட கஷ்டங்களை மற்றவர்கள் சந்திக்கக் கூடாது என நினைத்து பலருக்கும் உதவிகளை செய்தார். விஜயகாந்தை நல்ல மனிதர் என எல்லோரும் பாராட்டுகிறார்கள் அதற்கு முக்கிய காரணம் அவரின் நல்ல குணம்தான்.
இதையும் படிங்க: 22 முறை கமலுடன் மோதிய விஜயகாந்த் படங்கள்… ஜெயித்தது கேப்டனா? உலகநாயகனா?..
அதேநேரம், வடிவேலு போன்ற சிலர் விஜயகாந்தை கடுமையாக திட்டியதும் நடந்தது. விஜயகாந்தின் மீது இருந்த தனிப்பட்ட பகையை தீர்த்துக்கொள்வதற்காகவும், அவரை திட்டுவதற்காகவுமே ஒரு அரசியல் கட்சிக்குக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போனார் வடிவேலு. அப்போது விஜயகாந்தை மிகவும் மோசமாகவும், அசிங்கமாகவும் விமர்சித்தார். ஆனால், அதற்கு விஜயகாந்த் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. யாரும் வடிவேலுவுக்கு எதிராக பேசவேண்டாம் என அவரின் கட்சியினருக்கு கட்டளை போட்டவர்தான் விஜயகாந்த்.
ஒருமுறை அவரிடம் ‘நீங்கள் பலருக்கும் உதவி செய்திருக்கிறீகள். சில நடிகர்களுக்கு உதவி செய்ய முடியாமல் போயிருக்கும். அப்போது அவர்கள் உங்களை திட்டினால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?’ என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கூலாக பதில் சொன்ன விஜயகாந்த் ‘ இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடுவேன்’ என பதில் சொன்னார் விஜயகாந்த்.