Connect with us
Kamal, VK

Cinema History

22 முறை கமலுடன் மோதிய விஜயகாந்த் படங்கள்… ஜெயித்தது கேப்டனா? உலகநாயகனா?..

உலகநாயகன் கமல் விஜயகாந்தின் மனக்கணக்கு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். இருவரது படங்களும் மோதிக்கொண்டால் எப்படி இருக்கும்? வாங்க, பார்க்கலாம்.

1981ல் கமலின் சங்கர்லால், விஜயகாந்தின் சிவப்பு மல்லி ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். 1982ல் கமலின் மூன்றாம் பிறை, விஜயகாந்தின் பார்வையின் மறுபக்கம் ரிலீஸ். இதுல கமல் தான் வின்னர்.

1984ல் கமலின் எனக்குள் ஒருவன், விஜயகாந்தின் வைதேகி காத்திருந்தாள் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். 200 நாள்களுக்கும் மேல் ஓடி வெற்றி பெற்றது. அதே ஆண்டில் கமலின் ஒரு கைதியின் டைரி, விஜயகாந்தின் அலை ஓசை ரிலீஸ்.

Kamal, Vijayakanth

Kamal, Vijayakanth

இதுல கமல் படம் வெள்ளி விழா. அவர் தான் வின்னர். 1985ல் கமலின் காக்கி சட்டை, விஜயகாந்தின் ராமன் ஸ்ரீராமன் ரிலீஸ். இதுல கமல் தான் வின்னர். அதே ஆண்டில் கமலின் ஜப்பானில் கல்யாண ராமன், விஜயகாந்தின் ஏமாற்றாதே, ஏமாறாதே ரிலீஸ். இதுல கமல் தான் வின்னர்.

1986ல் கமலின் புன்னகை மன்னன், விஜயகாந்தின் தர்ம தேவதை, தழுவாத கைகள் ரிலீஸ். கமல் படம் வெள்ளி விழா. இதுல கமல் தான் வின்னர். 1987ல் கமலின் காதல் பரிசு, விஜயகாந்தின் சிறைப்பறவை ரிலீஸ். இதுல கமல் தான் வின்னர். அதே ஆண்டில் கமலின் நாயகன், விஜயகாந்தின் சட்டம் ஒரு விளையாட்டு, உழவன் மகன் ரிலீஸ். நாயகன் படம் சூப்பர் ஹிட் என்றாலும் உழவன் மகன் அதிக வசூலை பெற்றது.

1988ல் கமலின் உன்னால் முடியும் தம்பி, விஜயகாந்தின் தம்பி தங்க கம்பி, நல்லவன் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். 1989ல் கமலின் வெற்றி விழா, விஜயகாந்தின் ராஜநடை, தர்மம் வெல்லும் ரிலீஸ். இதுல வெற்றி விழா, ராஜநடை வெற்றி. 1990ல் கமலின் மைக்கேல் மதன காமராஜன், விஜயகாந்தின் சத்ரியன் படம் ரிலீஸ். இதுல கமல் படம் வெள்ளி விழா. இதுல இருவரும் வின்னர்.

1991ல் கமலின் குணா, விஜயகாந்தின் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ரிலீஸ். இதுல ரெண்டுமே பிளாப். 1992ல் விஜயகாந்துக்க சின்னக்கவுண்டர், கமலுக்கு சிங்காரவேலன் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர்.

1992ல் கமலின் தேவர் மகன், விஜயகாந்தின் காவியத்தலைவன் ரிலீஸ். இதுல கமல் தான் வின்னர். 1994ல் விஜயகாந்துக்கு சேதுபதி ஐபிஎஸ், கமலின் மகாநதி படமும் ரிலீஸ். இதுல இருவருக்கும் வெற்றி.

இதையும் படிங்க… என்னங்க ஹரி சினிமாட்டிக் யூனிவர்ஸா… சிங்கம் படத்தில் இது நடக்க இருந்தது… ஆனா ஜஸ்ட்டு மிஸ்ஸு..

அதே ஆண்டில் கமலின் நம்மவர், விஜயகாந்தின் பெரிய மருது ரிலீஸ். இதுல ரெண்டுமே பிளாப். 1995ல் கமலின் சதிலீலாவதி, விஜயகாந்தின் கருப்பு நிலா ரிலீஸ். இதுல கமல் தான் வின்னர். 1996ல் கமலின் அவ்வை சண்முகி, விஜயகாந்தின் அலெக்சாண்டர் ரிலீஸ். இதுல கமல் தான் வின்னர்.

2001ல் கமலின் ஆளவந்தான், விஜயகாந்தின் தவசி ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். 2003ல் கமலின் அன்பே சிவம், விஜயகாந்தின் சொக்கத்தங்கம் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர்.

2004ல் விஜயகாந்தின் எங்கள் அண்ணா, கமலின் விருமாண்டி படம் ரிலீஸ். இதுல இருவருமே வின்னர்.

google news
Continue Reading

More in Cinema History

To Top