Cinema News
சில்க் ஸ்மித்தா சான்சே இல்லை!.. அப்படியே பிரமிச்சி போயிட்டேன்!.. நம்ம குஷ்பு சொல்றத கேளுங்க!..
ஆந்திராவை சொந்த மாநிலமாக கொண்டாலும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சில்க் ஸ்மிதா. ரசிகர்கள் இவரை சுருக்கமாக சிலுக்கு என அழைத்தார்கள். தமிழை கொஞ்சி கொஞ்சி இவர் பேசிய அழகும், வாளிப்பான உடம்பை காட்டி இழுத்த கவர்ச்சியும் ரசிகர்களை கட்டிப்போட்டது.
ரஜினி, கமல் என எந்த நடிகராக இருந்தாலும் சரி, 80களில் வெளியான பெரும்பாலான படங்களின் வெற்றிக்கு சிலுக்கு தேவைப்பட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கவர்ச்சி பாடலுக்கு நடனமாடுவது மட்டுமில்லாமல் எல்லா படத்திலும் சின்ன சின்ன கதாபாத்திரத்திலும் சிலுக்கு வருவார்.
இதையும் படிங்க: மங்காத்தா விட கோட் மாஸ் காட்டும்… சம்பவம் சிறப்பா இருக்கும்… ஓபனாக பேசிய பிரபலம்!…
பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடித்து சிறப்பான கதையம்சம் கொண்ட மூன்றாம் பிறையின் வெற்றிக்கு சிலுக்கு தேவைப்பட்டார். இந்த படத்தில் திருமணமான சிலுக்கு கமலை பார்த்து ஏங்குவது போல காட்சிகளும், ஒரு கவர்ச்சி பாடலும் இடம் பெற்றிருக்கும்.
80களில் பலரின் கவர்ச்சி கன்னியாக சிலுக்கு இருந்தார். பலரையும் ஏங்க வைத்தார். 90களில் சில படங்களில் கவர்ச்சி நடனம் ஆடிய சிலுக்கு சொந்த வாழ்வில் ஏற்பட்ட சோகத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் ரசிகர்களிடமும், திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி!.. நடந்தது இதுதான்..!
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய குஷ்பு ‘நான் தமிழ் சினிமாவில் நடிக்கவந்த புதிதில் பிரமிப்பாக பார்த்த நடிகை சில்க் ஸ்மிதாதான். நானும், அர்ஜூனும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தோம். அந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சில்க் ஸ்மிதா நடித்தார். ஒருநாள் ‘மேடம் வருகிறார்’. மேடம் வருகிறார்’ என படப்பிடிப்பு குழுவே பரபரப்பானது.
சேர் போடப்பட்டு ஒரு துண்டு வைக்கப்பட்டு அருகில் ஒரு டேபிள் வைக்கப்பட்டது. அவர்கள் சொன்ன மேடம் சில்க் ஸ்மிதா. அவரை போல அழகான, பிரமிப்பான ஒரு நடிகையை நான் பார்த்தது இல்லை. அவரை போல உடலமைப்பு எந்த நடிகையிடம் இல்லை. அவர் அற்புதமான பேரழகி’ என குஷ்பு நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.